For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளிக் கிழமை ட்ரம்புக்கு அக்னிப் பரிட்சை… பாஸாகுமா ஹெல்த்கேர் மசோதா?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்) அதிபர் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீடு திட்டம் ஏழாம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஒபாமாகேர் என்று பொதுவாக அழைக்கப்படும் இத்திட்டத்தை, வாபஸ் பெற்று புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் ஏழு ஆண்டுகளாகவே போராடி வருகின்றனர்.

தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமாக ட்ரம்ப் முன் மொழிந்ததும் இது தான். அதை நிறைவேற்றும் வகையில் அதிபர் ட்ரம்பின் ஆதரவுடன், அவைத் தலைவர் பால் ரயன் புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

A fire test for Donald Trump on Friday

புதிய திட்டத்தினால் 24 மில்லியன் மக்கள் மருத்துவக் காப்பீட்டை இழக்க நேரிடும் என்ற ஆய்வறிக்கை குடியரசுக் கட்சியினர் மத்தியில் புயலைக் கிளப்பியது.

2018ம் ஆண்டு, சுழற்சி முறையில் காலியாகும் செனட் மற்றும் அவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வர இருக்கும் நேரத்தில், மக்களின் அதிருப்தியை எதிர் கொள்ள நேரிடும் என்பது முக்கிய தலைவர்களின் கருத்தாகும்.

பேச்சு வார்த்தை முடிந்தது .. ட்ரம்ப் அதிரடி

ஒரே கட்சியைச் சார்ந்தவர்கள் என்றாலும் , தமிழக சட்டமன்றம் போல் கொறடாவுக்கு கட்டுப்பட்டு மசோதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமெரிக்காவில் இல்லை.

A fire test for Donald Trump on Friday

தங்கள் சொந்த தொகுதியின் மக்களின் மன நிலைக்கு ஏற்பவே மசோதாக்களில் வாக்களிப்பார்கள். அவையில் என்னென்ன மசோதாவை ஆதரித்தேன், எதிர்த்தேன் என்று அடுக்கி மறு தேர்தலில் வாக்கு கேட்பார்கள். உதாரணமாக கலிஃபோர்னியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அங்குள்ள சூழலுக்கு ஏற்றதா, மீண்டும் மக்களிடம் சென்று வாக்க கேட்க முடியுமா என்றெல்லாம் யோசிப்பார்கள்

அதற்கேற்றவாறு மசோதாவில் திருத்தம் கொண்டுவரச் சொல்வார்கள். குடியரசுக் கட்சியில் மிதவாத குழுக்கள், தீவிர வலதுசாரிக் குழுக்கள் , இடது சாரி(கலிஃபோர்னியா, நியூயார்க் பகுதியைச் சார்ந்தவர்கள்) சார்ந்தவர்கள் என பலதரப்பட்ட உறுப்பினர்களும் உண்டு. அதே போல் ஜன நாயக் கட்சியிலும் வலது சாரி சார்ந்தவர்கள் சிலரும் உண்டு.

இரண்டு கட்சியிலும் உள்ள மிதவாதிகள் தான் ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு வழி வகுப்பவர்களாக இருப்பார்கள். குடியரசுக் கட்சியின் சில குழுவினர், தற்போதைய மசோதாவில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டி திருத்தம் செய்யச் சொல்லியுள்ளனர்.

A fire test for Donald Trump on Friday

அதிபர் ட்ரம்ப் சார்பில் வெள்ளை மாளிகை நிர்வாகிகளும், பால் ரயனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை. வெள்ளிக் கிழமை அனைத்து குடியரசுக் கட்சியினரும் மசோதாவை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

குறைகளை சரி செய்யுங்கள் - ஒபாமா

தற்போதைய காப்பீட்டுத் திட்டத்தில் குறைகள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதை சரி செய்ய முயற்சி எடுங்கள். அதை வரவேற்கிறேன். திட்டத்தை மொத்தமாக கைவிட்டு, அமெரிக்க மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்று ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

ஒபாமாகேர் திட்டத்தின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவாக, ஜனநாயகக் கட்சி செனட் மற்றும் அவை உறுப்பினர்களுடன் கொண்டாடிய முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுக் கட்சியினருக்கு அவையில் மெஜாரிட்டி இருந்தாலும், அவர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மிதவாத உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், புதிய மருத்துவக் காப்பீடு மசோதா இன்று நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விசா தடை உத்தரவைத் தொடர்ந்து அடுத்தடுத்த சோதனைகளைச் சந்தித்து வரும் அதிபர் ட்ரம்புக்கு, இந்த வெள்ளிக்கிழமை சொந்தக் கட்சியினரே பெரும் சோதனையாக உருவெடுத்துள்ளனர். அக்னிப் பரிட்சையில் வெல்வாரா ட்ரம்ப் என்பது இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை தெரிந்து விடும்.

-இர தினகர்

English summary
American Health Care Act bill, replacing Affordable Care Act (often called Obamacare) is facing tough challenges with in Republican Party members. The bill is scheduled to go for voting in the House of Representatives on Friday. Significant number of Republican members are opposing some of the critical elements of the bill. White House Officials and House Speaker Paul Ryan held talks with those dissident members. President Trump has given ultimatum to them that the bill has to be passed on Friday. It may not be surprise if the bill is defeated by its own party members.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X