ஒருவாரம் நிதானமாக திட்டம் தீட்டினேன்.. பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெக்சாஸ்: அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .சாரா ஹேண்டர்சன் என்ற இந்த பெண்மணி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

தனது குழந்தைகளை கொலை செய்ய இவர் ஒருவாரம் நிதானமாக திட்டம் தீட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். மேலும் இவர் தற்கொலைக்கும் முயற்சி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த கொலை தொடர்பாக அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 918 என்ற எண்ணுக்கு கொலை நடப்பதற்கு முன்பு அடிக்கடி கால் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் தனி பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார் ஹேண்டர்சன். இவர் நேற்று முதல் நாள் திடீர் என்று அமெரிக்காவின் அவசர உதவிக்கான அழைப்பு எண் 918க்கு கால் செய்து இருக்கிறார். கால் செய்து ''யாராவது வந்து என் மாணவியை காப்பாற்றுங்கள் அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறார் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் சில நிமிடத்தில் மீண்டும் கால் செய்து எல்லாம் சரியாகிவிட்டது இனி பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனாலும் போலீஸ் வந்து சிறிய விசாரணை நடத்திவிட்டு பிரச்சனை இல்லை என்றது சென்று இருக்கின்றனர்.

 குழந்தைகளை கொலை செய்தார்

குழந்தைகளை கொலை செய்தார்

ஹேண்டர்சன் தந்து மனைவி சாரா ஹேண்டர்சனை சமாதானப்படுத்திவிட்டு சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கி இருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் சாரா தந்து இரண்டு பெண் குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறார். தூங்கி எழுந்ததும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து ஹேண்டர்சன் மீண்டும் 918 எண்ணுக்கு கால் செய்து புகார் அளித்து இருக்கிறார். இவர் புகார் அளிக்கும் போது அவரது மனைவி சாரா பின்பக்கத்தில் இருந்து நான் எதுவும் செய்யவில்லை என்று கத்தி இருக்கிறார்.

 கணவரையும் கொல்ல திட்டம்

கணவரையும் கொல்ல திட்டம்

இந்த நிலையில் போலீசார் அந்த இடத்திற்கு வருவதற்கும் கணவனையும் அந்தப் பெண் கொலை செய்ய திட்டம் இட்டு இருக்கிறார். அதன்படி கையில் இருந்த துப்பாக்கியை வைத்து கணவனை நோக்கி சுட்டு இருக்கிறார். ஆனால் துப்பாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக அவர் மயிரிழையில் உயிர் தப்பித்து இருக்கிறார். இந்த சம்பவம் நடந்த போது சரியாக அந்த இடத்திற்கு வந்த போலீஸ் சாராவை கைது செய்து இருக்கின்றனர்.

 ஒரு வார திட்டம்

ஒரு வார திட்டம்

இந்த நிலையில் நேற்று முழுக்க சாராவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் இருந்து அவர் விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒத்துழைக்காமல் இருந்திருக்கிறார். கடைசியில் அவரை ''நான்தான் என் குழந்தைகளை கொலை செய்தேன். என் கணவரையும் கொல்ல முயற்சித்தேன். ஆனால் நடக்கவில்லை. இதற்காக நான் ஒரு வாரம் திட்டம் தீட்டினேன்" என்று கூறியிருக்கிறார். ஆனால் போலீஸ் விசாரணையில் இன்னும் அவர் கொலைக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A lady in texas called Sarah Henderson killed her two children and tried to kill her husband Henderson with a gun. She has arrested by American police. She told police that, "She has planned for one week to kill her daughters" .

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற