கிளி ஏற்படுத்திய கிலி.. அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலை வலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில் உள்ள வீட்டில் இருக்கும் ஒரு கிளி ஒரே நாளில் வைரல் ஆகி இருக்கிறது. அந்த கிளி வீட்டிற்கு வந்த கூரியர் பையனிடம் உதவி கேட்டு கத்தி இருக்கிறது.

மேலும் அந்த கிளி சாதாரணமாக கத்தாமல் பெண் குரலில், உண்மையான பெண் கத்துவது போலவே கத்தி இருக்கிறது. இதை தவறாக புரிந்து கொண்ட கூரியர் பையன் போலீசுக்கு கால் செய்து இருக்கிறான்.

கடைசியில் போலீஸ் வந்து மிகவும் கஷ்டப்பட்டு யார் உதவி கேட்டது என்பதை கண்டுபிடித்து இருக்கிறது. கிளியின் அந்த செயலை கண்டு போலீசார் வியந்து போய் இருக்கின்றனர்.

 உள்ளே கேட்ட உதவிக்கு குரல்

உள்ளே கேட்ட உதவிக்கு குரல்

நியூயார்க் நகரின் ஓரிகான் என்ற பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கொரியர் டெலிவரி கொடுக்க சென்று இருக்கிறார் 'லீ பர்ட' என்ற நபர். அவர் கதவை தட்டும் போது வீட்டிற்கு உள்ளே இருந்து ''ஹெல்ப் ஹெல்ப்' என்ற பெண் குரல் ஒன்று கேட்டு இருக்கிறது. முதலில் இதை நம்பாத அந்த நபர் சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டி இருக்கிறார். ஆனால் அப்போதும் அதேபோல் உதவிக் குரல் கேட்டு இருக்கிறது.

 மனைவி கூறிய யோசனை

மனைவி கூறிய யோசனை

இதன்காரணமாக பதட்டம் அடைந்த அந்த நபர் உடனடியாக தன் மனைவிக்கு கால் செய்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். அவர் மனைவி கொடுத்த அறிவுரையின் படி அவர் போலீசை அழைக்க முடிவு செய்து இருக்கிறார். இதன் காரணமாக அவர் அமெரிக்காவின் அவசர உதவி எண் 911க்கு அழைத்து இருக்கிறார். மேலும் பெண் ஒருத்தி உதவி கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.

 வேகமாக வந்த அதிகாரிகள்

வேகமாக வந்த அதிகாரிகள்

இதையயடுத்து அந்த பகுதியின் போலீசார் அங்கு அவசரமாக வந்து இருக்கின்றனர். அங்கு அவர்கள் கொரியர் பையனுடன் இணைந்து தேடி இருக்கின்றனர். ஆனால் சந்தேகப்படும்படி அங்கு எதுவுமே இல்லை. இதையடுத்து போலீசார் அங்கு இருந்து சென்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கின்றனர். அந்த சமயத்தில் கிளி மீண்டும் ''ஹெல்ப் ஹெல்ப்'' என சரியாக கத்தியிருக்கிறது.

 போலீசிடம் விளையாடிய கிளி

போலீசிடம் விளையாடிய கிளி

அசலாக பெண் போலவே கத்திய அந்த கிளியை பார்த்து போலீசார் திகைத்து போனார்கள். தற்போது அதுகுறித்து அவர்கள் டிவிட்டரில் எழுதி இருக்கிறார்கள். அதில் ''உதவி கேட்டு கூப்பிட்டதால இங்கே வந்தோம். கடைசியில இந்த கிளிதான் எங்ககிட்ட உதவி கேட்டு விளையாடி இருக்கு. அந்த கிளிக்கும் எதுவும் நடக்காம பாத்துக்கிட்டோம்'' என காமெடியாக எழுதி இருக்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Parrot seeks for help from American police. So police from 911 sector has arrived to its place and tweeted the whole incident.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற