வெடித்து சிதறிய தலை.. கல்வியை கொல்லாதீங்க.. ஆப்கன் குண்டுவெடிப்பால் ரஷீத் கான் உருக்கம்.. என்னாச்சு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிறுவனத்தில் வெடிகுண்டு வெடித்து 20க்கும் அதிகமான மாணவிகள் பலியான நிலையில் ‛கல்வியை கொல்லாதீர்கள்' என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத்கான் உருக்கமாக கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தன. இதையடுத்து ஆப்கனில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது.
இவர்களுக்கு மாணவிகள், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவங்கள்
இதற்கு மத்தியில் தான் தற்போது ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினி பிரச்சனை உள்ள நிலையில் தாலிபான்களின் கட்டுப்பாடுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்வி மையத்தில் தாக்குதல்.. 20 பேர் பலி
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் ஆப்கன் தலைநகர் காபூரில் காஜ் கல்வி நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தேர்வு எழுத காத்திருந்த மாணவிகள் உள்பட 20க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இருப்பினும் பலி மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

யாரும் பொறுப்பேற்கவில்லை
இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதனால் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர். அவர்களின் நோக்கம் என்ன என்பது பற்றி எந்த விபரமும் தெரியவில்லை. இதுதொடர்பாக தாலிபான்கள் விசாரணையை துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் கல்வி நிலையம் மீதான இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பல்வேறு மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் இருந்து மனித உரிமைகள் அமைப்பினர் வருத்தத்தை பதிவு செய்துள்ளதோடு, குண்டு வெடிப்பு சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளனர்.

ரஷீத் கான் உருக்கம்
இந்நிலையில் தான் குண்டுவெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "கல்வியைக் கொல்லாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பதிவிட்டுள்ள பதிவில் ஒரு படம் இணைத்துள்ளார். அந்த படத்தில் வெடிகுண்டு வெடித்து தலை சிதறி புத்தகங்கள் பறப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அதாவது கல்வி கற்க வந்து உடல் சிதறி மாணவ-மாணவிகள் இறந்ததை குறிக்கும் வகையில் அவர் அந்த படத்தை பதிவிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications