வெள்ளை மாளிகையில் 20 ஆண்டுகளாக வழங்கப்பட்ட இப்தார் விருந்து.. ரத்து செய்தார் டிரம்ப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒவ்வொரு ஆண்டும் வெள்ளை மாளிகையில் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து வழங்குவது வழக்கம். 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த வழக்கத்தை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் டிரம்ப்.

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பிருந்து மாலையில் உணவெடுத்து நோன்பை முடிப்பது வழக்கம். இந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இப்தார் விருந்து கொடுப்பது பழக்கம்.

இந்தப் பணிகளை செய்வதற்காக வெள்ளை மாளிகை ஊழியர் ஒரு மாதம் பணியாற்றுவார்கள். அதிபர் கிளிண்டன், புஷ், ஓபாமா ஆகியோரின் காலத்திலும் இந்த விருந்து வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்டு வந்து.

இப்தார் விருந்து ரத்து

இப்தார் விருந்து ரத்து

ஆனால் இந்த ஆண்டு வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படவில்லை. வெறும் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே வெள்ளை மாளிகையில் இருந்து வந்துள்ளது.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே அரசு செயலர் தில்லெர்சன், இந்த ஆண்டு இப்தார் விருந்து நடத்தும் திட்டம் இல்லை என்று அறிவித்திருந்தார். அதன்படியே இந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

20 ஆண்டு பழக்கம்

20 ஆண்டு பழக்கம்

வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்து வழங்குவது 1996ம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்போது கிலாரி கிளிண்டன்தான் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார். அப்போதிருந்து கடந்த ஆண்டு வரை தொடர்ந்து இப்தார் விருந்து நடைபெற்று வந்தது.

முஸ்லிம் விரோதம்

முஸ்லிம் விரோதம்

அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முஸ்லிம் விரோத சர்ச்சைப் பேச்சை பேசி வருபவர். அதிபர் தேர்தலின் போதே முஸ்லிம் எதிர்ப்பு பேச்சுக்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவர் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஈரான், ஈராக், சிரியா, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்கு வர தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
US President Donald Trump cancelled Eid celebration at White House after 2 decades.
Please Wait while comments are loading...