For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேபாளத்தின் அனைத்து விமானங்களும் திடீர் நிறுத்தம்.. பயணிகள் பரிதவிப்பு.. என்னாச்சு?

நேபாள தலைநகர் காதமாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவையும் முடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் சேவையும் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடும் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில் நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை முடங்கியதாக சொல்லப்படுகிறது.

இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். சுற்றிலும் மலைகள் சூழ்ந்துள்ளதால்
அங்கு பனிமூட்ட வானிலையே இருக்கும்.

நேபாள நாட்டில் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் திரிபுவன் விமான நிலையம் உள்ளது.

டீ பிடிக்குமா? மறந்தும் கூட டீயுடன் சேர்த்து இதை சாப்பிடாதீங்க.. மோசமான உடல்நல பிரச்சினை ஏற்படும்டீ பிடிக்குமா? மறந்தும் கூட டீயுடன் சேர்த்து இதை சாப்பிடாதீங்க.. மோசமான உடல்நல பிரச்சினை ஏற்படும்

திடீரென சேவை பாதிப்பு

திடீரென சேவை பாதிப்பு

நேபாளத்தில் அனைத்து விமானங்களும் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானங்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறை சீர் செய்யும் பணிகளில் தொழில் நுட்ப அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

பயணிகள் பரிதவிப்பு

பயணிகள் பரிதவிப்பு

விமான சேவை முடங்கியதால் பயணிகள் திட்டமிட்டபடி பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களிலும் பதிவிடுவதை காண முடிகிறது. சமீபத்தில் நேபாளத்தின் யெட்டி ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவம் நடைபெற்று சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் விமான சேவை நேபாளத்தில் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து

நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்து

நேபாளத்தில் கடந்த 15 ஆம் தேதி தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் 4 விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் யெட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏடிஆர்-72 ரக விமானம் புறப்பட்டது. இந்த விமானம் பொகாரா நகரில் தரையிறங்க முயற்சித்தபோது அங்குள்ள ஆற்றின் கரையில் மோதி தீப்பிடித்து விபத்து நேரிட்டது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். நேபாள நாட்டின் வரலாற்றில் 30 ஆண்டுகளில் இது மிக மோசமான விபத்து ஆகும். இந்த விமான விபத்தில் 5 பேர் இந்தியர்கள் உள்பட 15 வெளிநாட்டவர்களும் பயணம் செய்தனர்.

நேபாளத்தில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவது ஏன்?

நேபாளத்தில் விமான விபத்து அடிக்கடி ஏற்படுவது ஏன்?

நேபாள நாடு முழுவதும் பெரும்பாலும் மலைப்பிரதேசம் என்பதால், ஓரளவிற்குச் சமதளமான பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அதில்தான் ஓடுதளமும், விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தரையிறக்குவதிலும் கடும் சவால்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவே அங்கு அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதற்கும் காரணமாக கூறப்படுகிறது. அதுபோக பனிமூட்டமான வானிலை , போதிய பயிற்சி இல்லாத விமானிகள், நவீன தொழில்நுட்பம் இல்லாத பழைய விமானங்கள், பராமரிப்பு குறைபாடுகள் ஆகியவையும் விமான விபத்துக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

English summary
All flights have been suspended at Tribhuvan Airport in Kathmandu, the capital of Nepal. Due to this, the passengers have suffered a lot. The flight service is said to have been grounded due to a technical glitch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X