For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளத்தோடு சிகரெட் பாக்கெட், 5 பீர் கேன்கள்...

Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்டாம்: மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு அளித்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உண்டாக்கித் தரும் வகையில் புதிய திட்டமொன்றை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது ஆம்ஸ்டர்டாமில் இயங்கும் ரெயின்போ அமைப்பு.

ஆம்ஸ்டர்டாமில் உள்ள பூங்காக்களில் மது அருந்திவிட்டு, அங்கு வருபவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதற்கு தீர்வு காண நினைத்த ரெயின்போ அறக்கட்டளை நிறுவனத்தார் போட்ட ஐடியா தான் சம்பளத்தோடு, சிகரெட் மற்றும் பீர் போன்றவற்றை அளிப்பது.

அறக்கட்டளை...

அறக்கட்டளை...

அரசு மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் இயங்கி வரும் அறக்கட்டளை நிறுவனமான ரெயின்போவின் தலைவரான ஜெர்ரி ஆல்டர்மேன் தலைமையில் செயல் படுத்தப் பட்டுள்ளது இத்திட்டம்.

சுத்தம் என்பது நமக்கு....

சுத்தம் என்பது நமக்கு....

இதன்படி, பூங்காவில் அமர்ந்து சத்தமிட்டு பிறரை தொந்தரவு செய்யும் குடிகாரர்களை குழுக்களாகப் பிரித்து, பூங்காக்களைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதன்படி, பூங்காவில் அமர்ந்து சத்தமிட்டு பிறரை தொந்தரவு செய்யும் குடிகாரர்களை குழுக்களாகப் பிரித்து, பூங்காக்களைச் சுற்றியுள்ள தெருக்களை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

சம்பளத்தோடு சரக்கு....

சம்பளத்தோடு சரக்கு....

இவ்வாறு துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒருநாள் சம்பளமாக 10 யூரோ பணமும், அரை பாக்கெட் சிகரெட்டும், ஐந்து பீர் கேன்களும் கொடுக்கப்படுகின்றன.

மாத்திரை மாதிரி...

மாத்திரை மாதிரி...

அவர்களுக்கு காலையில் இரண்டு பீர் கேன்களும், மதியம் இரண்டு கேன்களும் மாலை வேலை முடிந்து செல்லும்போது ஒரு கேனும் என பிரித்துப் பிரித்து வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறையும் குற்றங்கள்...

குறையும் குற்றங்கள்...

சமூக விரோத நடத்தை கொண்ட மக்களை பயன்படுத்தி இவ்வாறு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப் படுவதால், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், மேலும், அவர்கள் மது அருந்தும் அளவு கண்காணிக்கப்படுவதால் அவர்களது உடல்நிலைக் குறித்த அக்கறை அதிகரித்துள்ளதாகவும் திட்டசெயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
At 9 o’clock in the morning in a garden shed behind a house in Amsterdam, a handful of alcoholics are getting ready to clean the surrounding streets, beer and cigarette in hand. For a day’s work, the men receive €10 (around $13), a half-packet of rolling tobacco and, most importantly, five cans of beer: two to start the day, two at lunch and one for after work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X