For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெர்மன் நாடாளுமன்ற தேர்தல்: 3வது முறையாக பிரதமராகிறார் ஏஞ்சலா மெர்கல்

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று, ஏஞ்சலா மெர்கலின் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

ஜெர்மனியில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சிக்கும், எல்.பி.டி. கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

ஓட்டுப்பதிவில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்துச் சென்றனர். பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. அதில், மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி 42 சதவீதம் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தது உறுதியானது.

Angela Merkel re-elected in show of strong support for party

மெர்கலினை எதிர்த்து போட்டியிட்ட எல்.பி.டி. கட்சிக்கு 26 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் படி மெர்கலின் மூன்றாவது முறை பிரதமராவது உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்னர், ஏஞ்சலா மெர்கல் கடந்த 2005 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று கடந்த இரண்டு முறையும் பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

59 வயதாகும் கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் ஒரு இயற்பியல் வல்லுனர். கடந்த 1989-ம் ஆண்டு பெர்லின் சுவர் இடித்து வீழ்த்தப்பட்டு மேற்கு ஜெர்மனியும், கிழக்கு ஜெர்மனியும் ஒன்றாக இணைந்த போது அரசியலுக்கு வந்தவர்.

தற்போதைய அரசியல் உலகில் பலம் வாய்ந்த பெண் அரசியல்வாதியாக திகழும் மெர்கல், இதற்கு முன் நீண்ட நாட்களாக பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற மார்க்கரெட் தாட்சரின் சாதனையை இதன் மூலம் முறியடிக்க உள்ளார்.

English summary
Chancellor Angela Merkel scored a stunning personal triumph in Sunday's national elections in Germany, becoming the only major leader to be re-elected twice since the financial crisis of 2008 and winning strong popular endorsement for her mix of austerity and solidarity in managing troubled Europe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X