செல்பி எடுத்த பென்குயின்கள்... இந்த வைரல் வீடியோவை பார்த்தீர்களா?

Posted By: Jaya chitra
Subscribe to Oneindia Tamil
  செல்பி எடுக்கும் பென்குயின் வைரல் வீடியோ

  சிட்னி: ஆஸ்திரேலியாவில் இரண்டு பென்குயின்கள் செல்ஃபி எடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

  ஆஸ்திரேலியாவின் ஆஸ்தர் தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய அன்டார்டிகா பிரிவின் மாசன் ஆராய்ச்சி நிலையத்தில், விலங்கியல் ஆர்வலர் ஒருவர் பென்குயின்கள் கூட்டமாக வசிக்கும் இடத்தில் தானியங்கி கேமரா ஒன்றை பொருத்திவிட்டு சென்றார்.

  Antarctic Penguins Took A Selfie

  சில தினங்களுக்கு பிறகு அந்த கேமராவை எடுத்து பார்த்த போது, அதில் பதிவாகி இருந்த காட்சிகள் அவருக்கு வியப்பை ஏற்படுத்தின.

  அதில், தங்கள் இருப்பிடத்தில் புதிய பொருள்(கேமரா) ஒன்றை கவனித்த பென்குயின் ஒன்று, அதின் அருகில் வந்து நின்று உற்றுப்பார்க்கிறது. அப்போது அந்த பென்குயினின் கால்கள் மட்டும் கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அந்த பென்குவின் கேமராவை உதைக்கிறது.

  இதனால் அந்த கேமரா மல்லாக்க விழுகிறது. அப்போது அதில் அந்த பென்குயினின் முகம் தெரிகிறது. கேமரா லென்ஸை பென்குயின் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கும்போது, மற்றொரு பென்குயினும் அதனுடன் சேர்ந்து லென்ஸைப் பார்க்கிறது.

  இந்த காட்சிகள் பார்க்கும் போது இரண்டு பென்குவின்களும் செல்ஃபி எடுத்துக்கொண்டது போல் தெரிகிறது. 38 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவை ஆஸ்திரேலியாவின் அன்டார்டிக் பிரிவு மாசன் ஆராய்ச்சி நிலையம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

  இதையடுத்து அந்த காட்சிகள் வைரலாகி உலகம் முழுவதும் பரவி வருகிறது. விலங்குகள் செல்பி எடுத்துக் கொள்வது இது முதல் முறையல்ல என்றாலும், பென்குயின்களின் இந்த க்யூட் செல்பி வீடியோ பார்ப்பவர்களை வாவ் சொல்ல வைக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Two emperor penguins in Antarctica captured a short video of themselves after coming across a camera left on the ice by a human.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற