For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விண்வெளி வீரரின் டூத் பிரஷ் ரூ.7 லட்சத்துக்கு ஏலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி ஆய்வு திட்டத்தின்கீழ் நிலவுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட விண்வெளி வீரரின் டூத் பிரஷ் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.

அமெரிக்காவில் நிலவுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள அப்போலோ விண்கலத் திட்டத்தை நாசா உருவாக்கியது. கடந்த 1970ம் ஆண்டு அப்போலோ 13 என்றவிண்கலத்தின் கட்டுப்பாட்டு விமானியாக ஜாக் ஸ்விஜெர்ட் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் பணியாற்றினார். பின்னர் 1982ம் ஆண்டு எலும்பு புற்றுநோயால் ஸ்விஜெர்ட் பாதிக்கப்பட்டு 51வது வயதில் மரணமடைந்தார். இவரது விண்வெளி பயணம் 1995ல் அப்போலோ 13 என்ற ஹாலிவுட் திரைப்படமாக வெளிவந்தது. இவரது கதாபாத்திரத்தில் நடிகர் கெவின் பாகோன் நடித்திருந்தார்.

Apollo 13 astronaut Jack Swigert's toothbrush sells for 7 lahs rupees

விண்கலத்தில் நிலவுக்கு சென்று ஆய்வு செய்த போது ஜாக் ஸ்விஜெர்ட் பயன்படுத்திய பொருட்கள் நேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டிசான்டர்ஸ் ஏல நிலையத்தில் ஏலம் விடப்பட்டது. அவற்றில் அவர் பயன்படுத்திய டூத் பிரஷ் ஒன்று இந்திய மதிப்பில் ரூ.7 லட்சத்துக்கும், பென்சில் ரூ.6 லட்சத்துக்கும் ஏலம் போனது. அவர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனது என்று டிசான்டர்ஸ் ஏல நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இவற்றை வாங்கியவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது.கடந்த வாரம் மாசாசூசெட்சில் நடைபெற்ற ஏலத்தில், நிலவுக்கு சென்ற அப்போலோ&15 என்ற விண்கலத்தில் பயன்படுத்திய கட்டுப்பாட்டு கருவி ரூ.3 கோடிக்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A toothbrush used by an American astronaut who flew to the Moon has sold at auction for nearly $13,000 - triple the starting bid. The toothbrush was used by command module pilot Jack Swigert during the 1970 Apollo 13 mission and sold for $US11,974, according to the Nate D Sanders auction house, which did not reveal the buyer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X