For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேகமாக துடித்த இதயம்.. கண்டுபிடித்த ஆப்பிள் வாட்ச்! கட்டியிருந்தவரின் உயிரைக் காப்பற்றியது எப்படி?

கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கையால் ஒருவரின் வாழ்க்கை கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்; கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் கொடுத்த இறுதி நேர எச்சரிக்கையால் ஒருவரின் வாழ்க்கை கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த நபர் சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதயத்தின் வேகத்தை கணக்கிட்டு அதன் மூலம் அந்த நபரின் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது இந்த ஆப்பிள் வாட்ச்.

பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய இந்த வாட்ச் இப்படி மிகவும் மோசமான நிலையில் உதவி செய்யும் என எதிர்பார்க்கவில்லை என்று அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

 அமெரிக்க பத்திரிக்கையாளர்

அமெரிக்க பத்திரிக்கையாளர்

ஜேம்ஸ் கிரீன் அமெரிக்காவின் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வருகிறார். மிகவும் கடினமான சூழ் நிலையில் வேலை பார்க்கும் இவருக்கு அடிக்கடி மெல்லிய இதய வலி ஏற்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. மேலும் இவருக்கு பல விஷயங்களைப் பார்த்து பயப்படும் ''ஆங்க்ஸைடி'' என்ற குறைபாடும் இருந்திருக்கிறது. இதையடுத்து அவர் விளையாட்டாக சில வருடங்களுக்கு முன்பு ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒன்றை வாங்கியுள்ளார்.

 காட்டிக் கொடுத்த ஆப்பிள் வாட்ச்

காட்டிக் கொடுத்த ஆப்பிள் வாட்ச்

பல நாட்களாக அந்த வாட்சை காரணமே இல்லாமல் கையில் கட்டி இருந்திருக்கிறார் அவர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ஆப்பிள் வாட்ச் எப்போதும் போல் அல்லாமல் திடிரென்று அவரது இதயத்தை வேகமாக துடிப்பதாக காட்டியிருக்கிறது. மேலும் அந்த நேரத்தில் அவர் அமைதியாகத்தான் இருந்திருக்கிறார். இதயம் திடீர் என்று வேகமாக துடிப்பதாக வாட்ச் காட்டியதை அடுத்து இவருக்கு சந்தேகம் வரவே மருத்துவருக்கு கால் செய்துள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு சென்றார்

அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்ற இவருக்கு மருத்துவமனையில் நுழைந்த போது சரியாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளை அவர் அப்போது மருத்துமனையில் இருந்ததால் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் இருந்த இவர் இப்போது சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து அவர் தான் கட்டியிருந்த பழைய வாட்ச்சுக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார்.

இந்த ஆப்பின் கதை

இந்த நிலையில் இவர் கட்டியிருந்த ஆப்பிள் வாட்சில் இருக்கும் ''ஹார்ட் வாட்ச்'' என்ற அப்ளிகேஷன்தான் இவரது இதய வேகத்தை கணித்ததாக கூறப்படுகிறது. இந்த அப்ளிகேஷனை வடிவமைத்த டேவிட் வால்ஷ் என்பவர் தன்னுடைய அப்பாவின் நினைவாக இதை வடிவமைத்தாக கூறுகிறார். இது பற்றி அவர் ''என்னுடைய அப்பா திடிரென்று மாரடைப்பால் இறந்ததால் , இனியும் யாரும் அப்படி இறக்க கூடாது என்று இந்த அப்ளிகேஷனை வடிவமைத்தேன். இதற்கு உதவிய ஆப்பிள் நிறுவனத்திற்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்'' என்றார்.

English summary
Apple Watch notification saved a man’s life, called James Green in America. He called doctor after found high rate of heart beating in watch.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X