For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்டுபிடித்தவரின் அஸ்தியுடன் ப்ளூட்டோவுக்குப் பறக்கும் நாசா விண்கலம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ப்ளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானி க்ளைட் டாம்பாக் என்பவரின் அஸ்தியைச் சுமந்து கொண்டு தான் ப்ளூட்டோவைக் கடக்க இருக்கிறது நாசாவின் நியூ ஹரிஸான்ஸ் விண்கலம்.

ஒவ்வொருவருக்கும் தனது அஸ்தியை ஒவ்வொரு இடங்களில் கரைக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், விஞ்ஞானி ஒருவரின் ஆசையோ கொஞ்சம் காஸ்ட்லியானது. ஆம், ப்ளூட்டோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானி க்ளைட் டாம்பாக்கின் அஸ்தி விண்கலம் மூலம் ப்ளூட்டோவிற்கு சென்றுள்ளது.

பூமியில் இருந்து 260 கோடி மைல் தூரத்தில் உள்ளது ப்ளூட்டோ. கடந்த 1930ம் ஆண்டு இதனை க்ளைட் டாம்பாக் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். முதலில் கோளாக அடையாளம் காணப்பட்ட ப்ளூட்டோ பின்னர் விண்கல்லாக அதனைக் குறிப்பிடத் தொடங்கினர் விஞ்ஞானிகள்.

கடைசி ஆசை...

கடைசி ஆசை...

கடந்த 1997ல் தனது 90வது வயதில் மரணத்தைத் தழுவினார் டாம்பாக். அப்போது அவருக்கு கடைசி ஆசை ஒன்று இருந்தது. அதாவது, தனது அஸ்தியின் ஒரு பகுதியை விண்வெளியில் சேர்த்து விடுங்கள் என்பது தான் அது.

பத்திரப் படுத்தப்பட்டது...

பத்திரப் படுத்தப்பட்டது...

மாபெரும் விஞ்ஞானியான டாம்பாக்கின் கடைசி ஆசையை நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து டாம்பாக்கின் அஸ்தி பத்திரப்படுத்தப் பட்டது.

நியூ ஹாரிஸான்ஸ்...

நியூ ஹாரிஸான்ஸ்...

இந்த சூழ்நிலையில் தான் ப்ளூட்டோ குறித்து ஆராய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

அஸ்தி...

அஸ்தி...

அந்த நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தில் டாம்பாக்கின் அஸ்தி வைக்கப் பட்டது. கூடவே, சுமார் நாலரை லட்சம் மக்களின் பெயர்கள் அடங்கிய சி.டி ஒன்றும் ப்ளூட்டோ ஆய்வு புகைப்படங்கள் அடங்கிய இன்னொரு சி.டியும், அமெரிக்கக் கொடி ஒன்றும் அந்த விண்கலத்தில் சேர்க்கப் பட்டது.

ப்ளூட்டோ...

ப்ளூட்டோ...

சுமார் 9 ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளியில் இருந்த படி ப்ளூட்டோ குறித்து புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருகிறது இந்த விண்கலம். இது இன்று ப்ளூட்டோ கிரகத்தை கடந்து போக உள்ளது.

English summary
Come Tuesday, Clyde Tombaugh will pass within 7,800 miles (12,550 kilometers) of the icy world he discovered 85 years ago. His ashes are flying on NASA's New Horizons spacecraft on humanity's first journey to Pluto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X