For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

படகு கவிழ்ந்திருக்கிறதே? அருகே போய் பார்த்தால்.. ஐஐயோ.. சுற்றுலா பயணிக்கு நடந்த திக் திக் சம்பவம்!

Google Oneindia Tamil News

அலாஸ்கா: அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய நாட்டினர் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் காண்போரை அச்சமடையச் செய்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்நாட்டில் சுற்றுலாவுக்கு என்றே பிரத்யேகமாக பல இடங்கள் உள்ளன. நியூயார்க், வாஷிங்டன், லாஸ் வேகஸ், கலிஃபோர்னியா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

இவை அனைத்தையும் விட மேலாக 'அலாஸ்கா' மாகாணமே உலக அளவில் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. அலாஸ்கா என்பது உண்மையிலேயே அமெரிக்காவில் இல்லை. இது, ரஷ்யா - கனடா எல்லையில் அமைந்துள்ள ஒரு பகுதி.

மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே! மின்வாரிய ஊழியர்களுக்கு 'குட் நியூஸ்' சொன்ன தமிழக அரசு.. 3% உயர்வு.. 2 மாத நிலுவைத்தொகை உடனே!

 சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அலாஸ்கா

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அலாஸ்கா

ஒருகாலத்தில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பகுதி பிற்காலத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. குளிரான தட்பவெப்பம், பனிசூழ்ந்த மலைகள், ஆர்ப்பரிக்கும் கடல்கள் என சுற்றுலா பயணிகளை கவரும் அத்தனை அம்சங்களும் அலாஸ்காவில் இருக்கிறது. இதனால் எப்போது பார்த்தாலும் சுற்றுலா பயணிகளால் அலாஸ்கா நிரம்பி வழியும்.

ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள்

ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள்

இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான ஆலிவர், வில்லியம், நோவா, ஒலிவியா, கிரேஸ் ஆகிய 5 பேர் அலாஸ்காவுக்கு கடந்த வாரம் சுற்றுலா சென்றனர். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள், கடைசியாக மிகவும் பிரபலமான 'பேரிங்' கடலுக்கு வந்தனர். சீ சர்ஃபிங், மோட்டார் படகு, பாராசூட் என பல விளையாட்டுகளில் இங்கு ஈடுபடலாம். எனவே அலாஸ்காவுக்கு வருபவர்கள் பேரிங் கடலை பார்க்காமல் செல்ல மாட்டார்கள்.

ஆபத்தான கடல்..

ஆபத்தான கடல்..

ஆனால், எந்த அளவுக்கு பேரிங் கடல் அழகானதோ, அந்த அளவுக்கு இது ஆபத்தானதும் கூட. ஏனெனில், பேரிங் கடலில் திமிங்கலங்கள் மிக அதிகம். ஆண்டுதோறும் இந்தக் கடலில் திமிங்கலத்தால் பல சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில், மேற்குறிப்பிட்ட ஆஸ்திரேலியா சுற்றுலாப் பயணிகள் ஒரு ரேஸிங் படகை எடுத்துக் கொண்டு பேரிங் கடலில் வேகமாக சென்றனர். கடலின் அழகை கண்டு ரசித்த அவர்கள், ஒருகட்டத்தில் கரையில் இருந்து கடலுக்குள் மிக தொலைவுக்கு சென்றுவிட்டனர்.

 எச்சரிக்கையை மீறி..

எச்சரிக்கையை மீறி..

இருந்தபோதிலும், ஆர்வமிகுதியில் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு தான் செல்ல வேண்டும் என்றும், அதற்கு மேல் சென்றால் திமிங்கலங்கள் அதிகம் இருக்கும் எனவும் அலாஸ்கா போலீஸார் சார்பில் பல எச்சரிக்கை பலகைகள் கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதை சில சுற்றுலா பயணிகள் கடைப்பிடிப்பதில்லை. இந்த ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

 ராட்சத திமிங்கலம்

ராட்சத திமிங்கலம்

இதனிடையே, கடலின் நடுப்பகுதி வரை சென்ற அவர்கள் அங்கிருந்து கரைக்கு வேகமாக திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு சற்று தொலைவில் ஒரு படகு கவிழ்ந்திருப்பதை அவர்கள் பார்த்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், படகில் இருந்தவர்களை மீட்கும் நோக்கில் அதன் அருகே சென்றுள்ளனர். பக்கத்தில் சென்று பார்த்தபோது தான் அது படகு அல்ல.. ஒரு ராட்சத திமிலங்கத்தின் வாய் என்பது தெரியவந்தது. இவர்கள் அருகே வருவார்கள் என எதிர்பார்த்த அந்த திமிங்கலம், அவர்கள் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து சென்றதும் தனது பெரிய வாயை மூடி கடலுக்குள் சென்றது.

'சாகும் வரை மறக்க மாட்டோம்'

'சாகும் வரை மறக்க மாட்டோம்'

இதை பார்த்த ஆஸ்திரேலிய பயணிகள் தப்பித்தோம், பிழைத்தோம் என உயிரை கையில் பிடித்துக்கொண்டு கரையில் வந்துள்ளனர். இந்தக் காட்சியை அவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்களில் ஒருவரான ஆலிவர் கூறும்போது, "திமிங்கலங்களை தொலைக்காட்சிகளில் பல முறை பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் வாய் மட்டுமே இவ்வளவு பெரிதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. உண்மையிலயே ஒரு பெரிய படகு தலைகீழாக கவிழ்ந்ததை போன்று தான் அதன் வாய் இருந்தது. அருகில் செல்ல செல்லதான் அதில் வித்தியாசத்தை உணர்ந்து படகை மெதுவாக இயக்கினோம். அதற்குள்ளாக அது வாயை மூடிக்கொண்டது. இப்போது கூட நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என நம்ப முடியவில்லை. சாகும் வரை இதை நாங்கள் மறக்க மாட்டோம்" என்றார்.

 ஹம்ப்பேக் திமிங்கலமும் - வேட்டை தந்திரமும்..

ஹம்ப்பேக் திமிங்கலமும் - வேட்டை தந்திரமும்..

ஆஸ்திரேலியா சுற்றுலா பயணிகள் பார்த்த இந்த திமிங்கலம் ஹம்ப்பேக் திமிங்கலம் ஆகும். 60 அடி நீளம் கொண்ட இந்த திமிங்கலம் சில வேட்டையாடிகளாக விளங்குகின்றன. தேவைப்பட்டால் வேகமாக துரத்திச் சென்று இந்த திமிங்கலங்கள் வேட்டையாடும். சில நேரங்களில் கடலின் மேற்பரப்புக்கு வந்து தனது வாயை அகலமாக திறந்து வைக்கும். இதை சட்டென பார்த்தால், யாருக்கும் திமிங்கலம் எனத் தெரியாது. கடலில் ஏதோ வித்தியாசமான பொருள் இருப்பதாகவே தோன்றும். இதை பார்த்து சில சுறா உள்ளிட்ட மீன்கள் அந்த இடத்திற்கு வரும். அப்போது இந்த திமிங்கலம் ஒரே வாயில் அவற்றை விழுங்கிவிடும். நினைத்தாலே திக் திக் என இருக்கிறதே..

English summary
Australian tourists, who went to alaska last week, were escaped narrowly from Humpback Whale. They recorded video of the incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X