For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம்.. உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்

Google Oneindia Tamil News

மனாமா: நீண்ட காலம் பிரதமராக இருந்த பஹ்ரைன் பிரதமர் இளவரசர் கலிஃபா பின் சல்மான் அல் கலிஃபா மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 84.

பஹ்ரைன் சுதந்திரம் அடைந்த பின்பு 1971ஆம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றவர், இளவரசர் கலிஃபா. தொடர்ந்து அவர்தான் பிரதமராக இருந்தார்.

எனவே, உலகிலேயே நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமையை கலிஃபா பெற்றிருந்தார். இந்த நிலையில்தான், இன்று அவர் மரணமடைந்தார்.

Bahrain’s long-serving PM Khalifa bin Salman Al Khalifa dies

இதுகுறித்து அரசு ஊடகம் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கலிஃபா புதன்கிழமை மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்குகள் இளவரசர் இல்லத்தில் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு அரபு வசந்தம் என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள் அரபு நாடுகளில் நிகழ்ந்த பொழுது ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டக்காரர்களால் இளவரசர் கலிஃபா பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இவர் மீது போராட்டக்காரர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. பீகார் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.. பீகார் வெற்றிக்கு மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்

1942 முதல் 1961 வரை ஆட்சி செய்த பஹ்ரைனின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் சல்மான் பின் ஹமாத் அல் கலீஃபாவின் மகன்தான், இந்த கலீஃபா. தனது தந்தையிடமிருந்து ஆட்சி நிர்வாகத்தை இவர் கற்றுக்கொண்டார்.

சகோதரர் ஷேக் ஈசா பின் சல்மான் அல் கலீஃபா 1961இல் பஹ்ரைன் ஆட்சியைப் பிடித்தார். இதனிடையே 1971 இல் பஹ்ரைன் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றபோது மன்னராக பணியாற்றினார்.

கலிஃபா பிரதமரான பிறகு, எண்ணெய் இருப்புக்கள் குறைந்து வருவதை கவனித்து, அதையும் தாண்டி பஹ்ரைன் வேகமாக முன்னேற சுற்றுலாத் துறையை மேம்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bahrain’s long-serving Prime Minister Sheikh Khalifa bin Salman Al Khalifa has died, the state media reported. He was 84.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X