For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நயாகரா நீர்வீழ்ச்சி: 100 ஆண்டுகளுக்கு முன்பு 150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு.. கனமழையால் வெளியே வந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    நயாகரா நீர்வீழ்ச்சி: 100 ஆண்டுகளுக்கு முன்பு 150 அடி ஆழத்தில் மூழ்கிய படகு.. கனமழையால் வெளியே வந்தது

    ஒட்டாவா: நயாகரா நீர்வீழ்ச்சியில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய படகு ஒன்று பலத்த காற்று மற்றும் கனமழையால் வெளியே வந்தது.

    கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் 1918-ஆம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஒரு அருவிக்கு அருகே சென்று கொண்டிருந்தது. அது இழுவை படகு என்பதால் பலத்த காற்று காரணமாக பாறைகளுக்கு இடையே சிக்கியது. அதாவது ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியிலிருந்து 650 கஜ தூரத்தில் சிக்கியது.

    அந்த படகில் இரு மீனவர்கள் இருந்தனர். அந்த இருவருடன் சேர்த்து படகையும் மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அது முடியவில்லை.

    வாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்வாரத்துக்கு நான்கு நாள் வேலை செஞ்சா போதும்... பரிசோதனை செய்த மைக்ரோசாப்ட்.. சூப்பர் ரிசல்ட்

    மீனவர்கள்

    மீனவர்கள்

    இதையடுத்து அந்த படகை விட்டுவிட்டு இரு மீனவர்கள் மட்டும் கரையேறினர். அந்த படகு 150 அடி ஆழத்தில் சிக்கியது. மிகவும் வலிமையான படகான அது நயாகரா ஆற்றின் நீரோட்டத்திற்கு சிறிதும் அசையாமல் அங்கேயே இருந்தது.

    படகு

    படகு

    கிட்டத்தட்ட 101 ஆண்டுகளாக அதே இடத்தில் அப்படகு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் பாறைகளுக்கு இடையே சிக்கியிருந்த படகு ஆற்றின் நீரோட்டத்தில் அடித்து வரப்பட்டது.

    காற்றின் வேகம்

    காற்றின் வேகம்

    தற்போது அந்த படகு நீர்வீழ்ச்சிக்கு அருகே உள்ளது. காற்றின் வேகம் அதிகரித்தால் அந்த படகு மேலும் இழுத்து வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எப்படியிருக்கும் வேகம்

    101 ஆண்டுகள் கழித்து வெளியே வந்த அந்த படகை காண அப்பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். இந்த 100 ஆண்டுகளில் 150 அடி ஆழத்தில் இருந்த படகு மேலே வருவது இதுதான் முதல் முறை. அப்படியாயின் சூறாவளி காற்றின் வேகம் எப்படியிருந்திருக்கும் என்பதை எண்ணி பார்க்க முடியவில்லை.

    English summary
    A boat stuck on the rocks above the Niagara falls for more than 100 years unmoored by high winds.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X