For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரியா- வீடுகளுக்கு தீ வைத்து மீண்டும் 25 சிறுமிகளை கடத்திய போக்கோ ஹரம் தீவிரவாதிகள்

By Siva
Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 25 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர்.

நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் பகுதியில் 200 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றனர். அவர்களையே அவர்கள் இன்னும் விடுவிக்கவில்லை. இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்டா கிராமத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்தனர்.

அவர்கள் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர். 4 ஆண்களின் கழுத்தை வெட்டி கொலை செய்தனர். அதன் பிறகு அவர்கள் வீடு வீடாகச் சென்று 60 பெண்களை கடத்திச் சென்றனர். அதில் அவர்கள் 25 சிறுமிகளை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வயதான பெண்களை அனுப்பிவிட்டனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர்.

சிபோக்கில் இருந்து கடத்தப்பட்ட சிறுமிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தம் குறித்தும் அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தீவிரவாதிகள் 25 சிறுமிகளை கடத்தியுள்ளனர். அதுவும் அவர்களை செக்ஸ் அடிமைகளாக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

English summary
Boko Haram terrorists kidnapped 25 girls from a village in northeast Nigeria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X