தவளைக்கு பெண் தேடும் படலம்.. கோடிக்கணக்கில் நிதி.. வித்தியாசமான வேலன்டைன்ட்ஸ் டே கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொலிவியா: பொலிவியாவில் இருக்கும் பெரிய மியூசியங்களில் தேசிய வரலாற்று மியூசியமும் ஒன்று. இங்கு கடந்த 10 ஆண்டுகளாக அரியவகை தவளை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த தவளைதான், அதன் இனத்தில் கடைசி தவளையாகும். இதில் பெண் தவளை ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்னும் 5 வருடத்தில் இந்த தவளை இறந்துவிடும். அதற்குள் இதற்கு இணையை தேடி இந்த தவளை இனத்தை பாதுகாக்க வேண்டும் என்று தற்போது அதற்கு பெண் தேடும் படலம் நடந்து வருகிறது.

இணையம்

இணையம்

இதற்காக புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் பகுதியில் இருக்கும் தவளைகள் குறித்து பேசலாம். இது கிட்டத்தட்ட அந்த தவளைக்கான டேட்டிங் வெப்சைட் ஆகும்.

தவளை வீடியோ

தவளை வீடியோ

இந்த தவளையின் பெயர் ரோமியோ. இது தற்போது ஜூலியட்டை தேடுவதாக கிராபிக்ஸ் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் அந்த தவளை கிராபிக்ஸ் மூலம் தன் தனிமையின் ஏக்கம் குறித்தும், தன்னுடைய முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளது.

நிதி

நிதி

இதற்காக நிறைய நிதி திரட்டப்பட்டுள்ளது. இதுவரை 15 ஆயிரம் டாலர் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதற்காக ஆட்கள் பணம் கொடுத்து வருகிறார்கள்.

ஏன்

ஏன்

இந்த நிதி பல்வேறு காடுகளுக்கு சென்று இதற்கு ஜோடி தேட உதவும். அதிக பணம் சேர்ந்தால், இந்த தவளை போலவே குளோனிங் முறையில் பெண் தவளை உருவாக்குவார்கள். அதன்முலம் இந்த தவளையின் இனத்தை காக்கலாம் என்றுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bolivia museum opens dating website to find pair for Frog. It is a rare kind of frog, which lived 10 years as the single. They also raised fund find perfect match.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற