பிறந்த நாள் வாழ்த்துகள் கனடா… 150 வது ஆண்டு பிறந்தநாள் விழா கோலாகலம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆடவா(கனடா): கனடா நாட்டின் 150 பிறந்த நாள் இன்று (ஜூலை1) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. நாடு முழுவதும் இரவு வாணவேடிக்கை, வண்ண விளக்குகள் என்று ஒளிமயமாக பிரகாசிக்கப் போகிறது.

தலைநகர் ஆடவா வில் நடைபெற உள்ள கொண்டாட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 150 வது ஆண்டு விழா என்பதால் நாட்டு மக்களிடம் கூடுதல் குதூகலம் ஏற்பட்டிருக்கிறது. கனடியன் தமிழர்கள்களும் பெருவாரியாக கலந்து கொள்கிறார்கள். சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Canada is celebrating 150th birthday

பண்பாட்டுத் துறை அமைச்சர் மெலனி ஜாலி தலைமையில் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 'கனடியர்கள் அனைவரும் விழாவை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடி களிப்புறுவார்கள் என்று நம்புகிறேன். கடந்த இரண்டாண்டுகளாக 150 வது பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. கனடியர்கள் அனைவருக்கும் வாழ்வில் முக்கியமான நாளாக இதுஅமையும்' என்று மெலனி ஜாலி கூறியுள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர கொண்டாட்டங்களில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கார்ன்வா ல்சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்கள்.

தலைநகர் ஆடவா தவிர, ஒவ்வொரு மாகாண தலைநகரிலும் பெரிய அளவில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர அனைத்து நகரங்கள் உட்பட நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கனடா 150வது பிறந்த நாள் கொண்டாடத்தை முன்னிட்டு மத்திய அரசு ஏராளமான சிறப்புச் சலுகைகள் அளித்து உள்ளன.

Canada is celebrating 150th birthday

நாட்டின் அனைத்து தேசிய வனப்பூங்காகளில், கனடிய குடிமக்களுக்கு ஆண்டு முழுவதும் நுழைவுக் கட்டணம் 100 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து வனப்பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன. வரலாற்று நினைவிடங்களுக்கும் இது பொருந்தும்.

மாகாண கட்டமைப்புகளுக்காக 300 மில்லியன் டாலர்களை மத்திய அரசு சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. 40 மில்லியன் டாலர்கள் கலாச்சார மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது.

Canada is celebrating 150th birthday

தமிழ்மொழி உட்பட 12 மொழிகளில் 'ஓ கனடா' தேசிய கீதம் மொழிபெயர்க்கப்பட்டு ஒலி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ் , அரபிக், பஞ்சாபி, அமெரிக்க குறியீட்டு மொழி, க்ரீ, ஃப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலி, மாண்டரின், ஸ்பானிஷ், தக்கலாக், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ' ஒ கனடா' பாடல் நாடெங்கிலும் பரவசத்துடன் இசைக்கப்படுகின்றன.

அனைவரைதும் அரவணைத்தல், பல்லின கலாச்சாரம், முன்னேற்றம் ஆகிய முப்பெரும் கொள்கைகளை தனதாக்கிக் கொண்ட உலகின் சிறந்த ஜனநாயக நாடான கனடாவுக்கு உலகெங்கிலிருந்தும் 150 வது பிறந்த நாள் வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருகின்றன.

- இர தினகர், கனடாவிலிருந்து...

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Canada is celebrating 150th birthday with nationwide celebration. Special preparation, under the leadership of Heritage minister Melanie Joly, was being done for the past two years in the national capital Ottawa.
Please Wait while comments are loading...