For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடிக்கு சைவ உணவு சமைக்க ஷெப் சஞ்சீவ் கபூரை இந்தியாவில் இருந்து வரவழைத்த அபுதாபி அரசு

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: பிரதமர் நரேந்திர மோடிக்கு சைவ உணவு சமைத்துக் கொடுக்க அபுதாபி அரசு அதிகாரிகள் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரை இந்தியாவில் இருந்து வரவழைத்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

நேற்று இரவு மோடிக்கு அபுதாபி இளவரசர் ஹமீது பின் ஜயீத் அல் நஹ்யான் விருந்து அளித்தார். அந்த விருந்தில் மோடிக்கு சைவ உணவு வகைகளை சமைத்துக் கொடுக்க அபுதாபி அதிகாரிகள் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரை இந்தியாவில் இருந்து வரவழைத்துள்ளனர்.

சஞ்சீவ் கபூர் மோடிக்கு பிடித்த குஜராத்தி தாலி உணவு உள்ளிட்ட சைவ வகைகளை சமைத்துக் கொடுத்துள்ளார். இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பிரமதர் நரேந்திர மோடிக்கு அளித்த விருந்தில் ஸ்பெஷல் சைவ உணவை சமைக்க அமீரக அதிகாரிகள் ஸ்டார் சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூரை வரவழைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சீவ் கபூர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நம் பிரதமர் நரேந்திர மோடிஜி மற்றும் பிற பிரமுகர்களுக்கு சமைத்ததில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

English summary
Star chef Sanjeev Kapoor was flown to Abu Dhabi today to cook a special vegetarian fare for Prime Minister Narendra Modi for the dinner hosted by the Abu Dhabi Investment Authority (ADIA) that controls the $800 billion sovereign wealth fund of the oil-rich Gulf country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X