மனிதர்கள் பார்ப்பதால்.. வேட்டைத் தந்திரத்தை மாற்றிக் கொள்கிறதாம் குரங்குகள்.. ஒரு சுவாரசிய ஆய்வு

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: சிம்பன்சி குரங்குகள். மனிதர்கள் தங்களை கவனிப்பதால் வேட்டையாடும் முறைகளையும் உத்திகளையும் மாற்றிக் கொள்வதாக விலங்கின ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு முடிவுகள் பிஎல்ஒஎஸ் ஒன் என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது.

விலங்குகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் சிம்பன்சி குரங்குகள் வேட்டையாடுவது பற்றியும் அதன் உத்தி பற்றியும் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வைபீரா குரங்குகள்

வைபீரா குரங்குகள்

புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக் கழகத்தின் முன்னணி ஆய்வாளர் கேத்தரின் ஹோபெட்டர் என்பவர் வைபீரா என்ற குரங்கு வகையின் வேட்டையாடும் முறையை ஆய்வு செய்தார். இந்த வகைக் குரங்குகள் வேட்டையாடும் போது, பல தந்திரந்தை பயன்படுத்துகிறதாம்.

இயல்பில் மாற்றம்

இயல்பில் மாற்றம்

உகாண்டாவில் உள்ள புடோங்கோ காட்டில் குரங்குகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் ஹோபெட்டர். சிம்பன்சி வைபீரா வகை குரங்குகளை காடுகளில் பின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளும் இவர், மனிதர்கள் தங்களை கவனிப்பதால் குரங்குகள் தங்களது இயல்பில் இருந்து மாற்றம் பெறுகின்றன என்கிறார்.

வேட்டையில் மாற்றம்

வேட்டையில் மாற்றம்

காடுகளில் உள்ள சிம்பன்சி குரங்குகளின் அன்றாட செயல்பாடுகளை கூர்மையாக கவனித்து ஆய்வு செய்வதை, கூர்மையாக குரங்குகள் கவனிக்கின்றன. இதனால் அது பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுகின்றன. இதனால், சிம்பன்சி குரங்குகள் பலதரப்பட்ட இனங்களை வேட்டையாடுவதை மாற்றி குறிப்பிட்ட வகை குரங்குகளை மட்டும் வேட்டையாடுகிறதாம்.

எச்சரிக்கை உணர்வு

எச்சரிக்கை உணர்வு

தங்களுடைய எல்லை மற்றும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது சிம்பன்சி குரங்குகளின் எச்சரிக்கை உணர்வுதான் இதற்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தங்களுடைய வாழ்க்கையில் மனிதர்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது இந்த குரங்குகளுக்கு மிகவும் கடினமானதாக உள்ளதாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chimpanzees might be changed their hunting habits because of human watching.
Please Wait while comments are loading...