For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாசத்திற்கு எதிரான சீனாவின் வேட்டை... 18 லட்சம் இணைய கணக்குகள் முடக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

China closes 1.8 mn networking accounts in porn crackdown
பீஜிங்: ஆபாச படங்கள், விபச்சார தகவல்களை பறிமாறும் சுமார் 18 லட்சம் இணையதள முகவரிகளை சீன அரசு மூடியுள்ளது.

இணையதளத்தில் பரவும் ஆபாசத்தை கட்டுப்படுத்த சீன அரசு கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி இணையதளம் மூலமாக விபச்சாரத்திற்கு ஆள் பிடிப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது போன்ற செயல்கள் கடுமையான குற்றங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் செயல்படும் இணையதள நிறுவனங்களும், அரசின் வேண்டுகோளை ஏற்று சுய பரிசோதனை செய்து கொண்டு, தங்களது வெப்சைட்டுகளில் இடம் பெற்றிருந்த ஆபாச படங்களை அகற்றியுள்ளன. இதுதவிர சீன அதிகாரிகள் கட்டாயமாக பல வெப்சைட்டுகளை மூடியுள்ளனர். ஆக மொத்தம் 18 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சீனா அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. ஆபாசத்திற்கு எதிரான சீனாவின் வேட்டை தொடருகிறது.

English summary
China has closed nearly 1.8 million social networking and instant messaging accounts since April, when it launched a campaign to purge the internet of obscene content.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X