வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனா?.. பீதி கிளப்பும் சீனா.. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சீனாவில் பல்வேறு இடங்களில் மீண்டும் லேசான லாக்டவுன் போடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
உலக நாடுகளையே பயமுறுத்திய கொரோனா எனும் கொடிய வைரஸ் முதன் முதலாக கடந்த 2019-ம் ஆண்டில் சீனா நாட்டின் உகாண் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது.
அங்கு இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் கொஞ்சம், கொஞ்சமாக உலக நாடுகளுக்கு பரவி அடுத்த ஆண்டில் அதாவது 2020-ம் ஆண்டை உலக நாடுகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.

கொரோனாவின் கோர தாண்டவம்
சீனா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா உலக நாடுகளையே லாக்டவுனில் ஆழ்த்தியது. வெளிநாடுகளில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமலும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் திரும்ப செல்ல முடியாமலும், மகன் மகளை பிரிந்து தாய் தந்தையும் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இதேபோல் பள்ளி, கல்லுரி செல்ல முடியாமல் மாணவர்களும், வேலைக்கே செல்ல முடியாமல் தொழிலாளர்களும், வியாபரிகளும் என பல்வேறு தரப்பினர் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனது அனைவருக்கும் நினைவிருக்கும். குறிப்பாக உண்ண உணவின்றி ஏழைக்குடும்பத்தினர் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

சீனாவில் குறைவு தான்
இதேபோல் கொத்து கொத்தாய் பலி எண்ணிக்கை அதிகரித்து சென்றது, மருத்துவமனைகளில் மருந்துபொருட்களுக்கு பற்றாக்குறை என மக்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கிப்போட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு நாடுகளின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய கொரோனாவின் அறிமுகமிடமான சீனாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உலக பாதிப்புடன் ஒப்பிடுகையில் குறைவு தான். குறிப்பாக அந்த நாட்டு மக்கள் தொகையுடன் கம்பேர் பண்ணும்போது உலகிலேயே சீனாவில் குறைவான அளவு தான் பாதிப்பு என்று சொல்லலாம்.

கட்டுக்குள் வைத்திருந்த சீனா
உலக அளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியை தாண்டியுள்ள நிலையில், சீனாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 809- ஆக உள்ளது. இதேபோல் உலக நாடுகளில் மொத்தம் 60 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில் சீனாவில் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 226 ஆக உள்ளது. இது உலகின் பிற நாடுகளை ஒப்பிடுகையில் மிக மிக குறைவு ஆகும். வல்லரசு நாடான அமெரிக்காவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கிய போது, சீனா அசால்ட்டாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை
இதற்கு காரணம் சீனா கடைபிடிக்கும் 'ஜீரோ கோவிட்' கொள்கையே ஆகும். இதன்படி, கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து தீவிர பரிசோதனை மேற்கொண்டு கொரோனா பரவலை சீனா கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு சிலருக்கு கொரோனா பரவினால் கூட லட்சக்கணக்கான மக்கள வசிக்கும் நகரத்தையும் சீனா முடக்கி ஒரே நாளில் பரிசோதனை செய்து பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்தாலும் தீவிரமாக கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது.

மீண்டும் சீனாவில் லாக்டவுன்
தற்போது, கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு உலக அளவில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. சீனாவிலும் கொரோனா கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் சில முக்கிய நகரங்களில் லாக்டவுன் உள்பட கட்டுப்படுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் நேற்று 1,993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தலைநகர் பெய்ஜிங்கிலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா சில நகரங்களில் உள்ளூர் அளவில் பரவியிருப்பதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எத்தனை நாட்கள் நீடிக்கும்?
கடுமையான கட்டுப்பாடுகள் இன்றி மிதமான லாக்டவுனே போடப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கவில்லை. ஏனெனில், ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் வேகம் அதிகம் என்பதால் இந்த நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. ஈவு நகரத்தில் மக்கள் வீடுகளை விட்டும், அவர்கள் வழக்கமாக செல்லும் இடங்கள் ஆகியவை தவிர ஏனைய இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகள், அத்தியாவசிய பொருட்கள் ஆகியற்றை தவிர பிற நோக்கங்களுக்காக வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூடிய வளாகங்களுக்குள் இருந்து பணியாற்றிக்கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈவு நகரத்தில் அனைத்து பொது இடங்களும் மூன்று நாட்கள் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜின்ஜியாங்கின் தலைநகரான உரும்கியில் உள்ள முக்கிய மாவட்டங்களில் 5 நாட்கள் லாக்டவுன் நேற்று முதல் விதிக்கப்பட்டுள்ளன.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications