For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவின் வுகானில் அதிகரிக்கும் கொரோனா.. ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த அதிகாரிகள் முடிவு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவின் வுகான் நகரத்தில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால் அந்த நகரில் உள்ள ஒட்டுமொத்த மக்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ள அந்நாட்டு சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

2019ஆம் ஆண்டு இறுதியில் உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று வுகான் நகரில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் உலகமெங்கும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. இது எப்படி பரவியது என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த வைரஸை சீனாவே வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வெளியேற்றியதாக புகார்களும் எழுந்துள்ளன. இதை சீன அரசு மறுத்துள்ளது.

வுகானில் நிறைய பேருக்கு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா ஓராண்டுக்கும் மேலாக யாரும் பாதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சொத்துத்தகராறில் வெட்டி சாய்க்கப்பட்ட டாக்டர் சுப்பையா - கொலை பின்னணியும் பரபரப்பு தீர்ப்பும் சொத்துத்தகராறில் வெட்டி சாய்க்கப்பட்ட டாக்டர் சுப்பையா - கொலை பின்னணியும் பரபரப்பு தீர்ப்பும்

உள்நாட்டில் கொரோனா

உள்நாட்டில் கொரோனா

இவர்கள் 7 பேருக்கும் உள்நாட்டிலேயே கொரோனா நோய் பரவியது தெரியவந்தது. இந்த 10 நாட்களில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சீனாவில் உள்ள 15 மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது மற்றும் பொது முடக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது.

எளிதில் பரவக் கூடிய தன்மை

எளிதில் பரவக் கூடிய தன்மை

கொரோனா வைரஸ் மிகவும் எளிதில் பரவக் கூடிய தன்மை உடைய டெல்டா வேரியன்ட் மற்றும் உள்நாட்டு சுற்றுலா சீசனும் தொடங்கிவிட்டது. இதனால் நிறைய பேர் இந்த இடங்களில் கூடத் தொடங்குவர். இதனால் கொரோனா எளிதில் பரவ வழி வகுத்துவிடும். செவ்வாய்க்கிழமை மட்டும் சீனாவில் 90 பேருக்கு புதிதாக கொரோனை தொற்று உறுதியாகியுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள்

விமான நிலைய ஊழியர்கள்

தற்போது தொற்றானது சீனாவில் உள்ள நான்ஜிங் நகரத்திலுள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் மூலம் முதல்முதலில் தெரியவந்ததது. இங்குள்ள 92 லட்சம் மக்களுக்கும் மூன்று முறை கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திய அரசு முழு ஊரடங்கையும் அமல்படுத்தியது. அதே வேளையில் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான சாங்ஜியாச்சியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான்ஜியாங் நகரத்திற்கு வந்த பயணிகள் இங்கும் வருகை தந்தது தெரியவந்தது.

5 ஆயிரம் பேர்

5 ஆயிரம் பேர்

அது போல் சாங்கியாச்சியில் உள்ள ஒரு கலைக் கூடத்திற்கும் சுமார் 5 ஆயிரம் பேரைக் கண்டறியும் முயற்சிகளில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கலைக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்கள் சொந்த ஊருக்கும் திரும்பியுள்ளனராம். அங்கு எத்தனை பேருக்கு பரப்பினாரோ என தெரியவில்லை. இதனால் வுகானில் உள்ள 1.1 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய அரசு முன்வந்துள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள்

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்கள்

இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது மூன்றாவது அலையின் ஆரம்பக் கட்டம் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அரசு கூறி வருகிறது. ஏற்கெனவே இரண்டாவது அலையால் பல உயிர்களை இழந்த நிலையில் 3ஆவது அலையின் தாக்கம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. இதை எதிர்கொள்ள மத்திய மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்கின்றன. பல நாடுகளில் கொரோனாவின் 3ஆவது அலை பரவி வருகிறது.

English summary
China is going to take corona test in wuhan city as corona cases increases in that city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X