இந்தியாவைவிட 3 மடங்கு அதிகமாக ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு.. யாருக்கு சவால்விடுகிறது சீனா?
பெய்ஜிங்: சீனா இந்த வருடன் 230 பில்லியன் அமெரிக்க டாலர்களை ராணுவத்துக்காக ஒதுக்கி இருக்கிறது.
உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது சீனா. 20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது சீன ராணுவம்.
இந்தியா ராணுவத்துக்கு செலவிடும் தொகையைவிட மூன்று மடங்கு அதிகமான பணத்தை சீனா தன்னுடைய ராணுவத்துக்கு செலவிட்டு வருகிறது.

சீனா
சமீபகாலங்களில் சீனா, தொடர்ந்து இந்தியாவுடன் மோதல்போக்கை கடைபிடிக்கிறது. கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல், இந்திய எல்லைக்குள் வந்து இந்தியர்களை கடத்துவது உள்ளிட்ட செயல்களை தொடர்ச்சியாக செய்துவருகிறது சீன ராணுவம். அதோடு, ராணுவத்தில் பலமான அமெரிக்காவுடன் சரிசமமாக வளர, சீனா தனது ராணுவ பட்ஜெட்டை இந்த ஆண்டும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

சீன பட்ஜெட்
கடந்த 2021-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி இருந்தது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்பட்டது. இது 2020ம் ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும். 2022 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி 7.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 230 பில்லியன் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.17.57 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

ராணுவம்
சீன பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி இந்தியாவில் ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியை விட 3 மடங்கு அதிகமானது. உலகின் வலிமையான ராணுவமாக தன்னை கட்டமைக்கை ராணுவ பட்ஜெட்டை ஓவ்வொரு ஆண்டும் சீனா உயர்த்தி வருகிறது. சீனா ஒதுக்கிய பணத்தை விடவும் ராணுவத்துக்கு அதிகமாக செலவு செய்வதாகவும் சீனா மீது குற்றச்சாட்டு உள்ளது.

அதிபர் உத்தரவு
2035-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் படைகளை நவீனமயமாக வேண்டும் என்றும், 2049ஆம் ஆண்டுக்குள் போர்களில் சண்டையிட்டு வெற்றிபெறும் திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த ராணுவ சக்தியாக சீனா மாற வேண்டும் என்றும் அதிபர் ஸீ ஜின்பிங் உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து தான் ஒவ்வொரு ஆண்டும் சீனா ராணுவத்துக்கு அதிகமாக செலவு செய்துவருகிறது. கடந்த ஆண்டு சீன அதிபர் தலைமையில் போர் மற்றும் ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது சீனா.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications