இந்திய ராணுவத்திடம் மோத தில் இல்லாத சீனா.. சிக்கிமை வைத்து சிக்கலை ஏற்படுத்த பூச்சாண்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: எல்லையில் படைகளை திரும்ப பெறாவிட்டால் சிக்கிமை தனி நாடாக பிரிப்போம் என சீன அரசு மீடியா இந்தியாவை மிரட்டியுள்ளது. பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் உருவாகும் என்றும் இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சீன பத்திரிக்கை எச்சரித்துள்ளது.

இந்திய எல்லையில் உள்ள டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயன்று வருகிறது. தொடர்ந்து எல்லையில் அத்துமீறும் சீனாவை இந்திய ராணுவம் தடுத்து வருகிறது.

இதனால் கோபமடைந்துள்ள சீனா தமது படைகளை குவித்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் படைகளை குவித்துள்ளதால் இந்திய சீன எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது.

தூண்டும் சீன மீடியா

தூண்டும் சீன மீடியா

அதே நேரத்தில் சீனாவின் அரசு மீடியாக்கள் தொடர்ந்து பிரச்சனையை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் ட்ரம்பை மகிழ்ச்சிப்படுத்தவே இந்தியா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக கூறியது.

சிக்கிமை பிரிப்போம்

சிக்கிமை பிரிப்போம்

இந்நிலையில் எல்லையில் இருந்து இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இல்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என சீன அரசு மீடியா கூறிஉள்ளது.

மறு பரிசீலனை செய்யும்

மறு பரிசீலனை செய்யும்

சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும் என்றும் சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது. 2003-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டதை சீன மறு பரிசீலனை செய்யும் என்றும் சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது.

தனிநாடு எண்ணம் கொண்டவர்கள்

தனிநாடு எண்ணம் கொண்டவர்கள்

சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர் என்றும் மிரட்டும் பாணியில் சீன அரசு மீடியா தெரிவித்துள்ளது.

சுதந்திர போராட்டம்

சுதந்திர போராட்டம்


சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீன சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது, அவர்களுடைய கோரிக்கையானது விரிவடையும். சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும் என்றும் சீனா இந்தியாவை எச்சரித்துள்ளது.

பூடானுடனும் சிண்டுமுடிப்பு

பூடானுடனும் சிண்டுமுடிப்பு

மேலும் பூடானுடன் சிண்டு முடிக்கும் வேலையிலும் சீனா இறங்கியுள்ளது. சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது என்றும் சீன அரசு மீடியா குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இயக்கங்கள்

இந்தியாவுக்கு எதிரான இயக்கங்கள்

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் உருவாகும் என்றும் இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இது தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் அந்த பத்திரிக்கை எச்சரித்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chinese state media warns India that 'Back off border dispute or Beijing will support Sikkim's independence.
Please Wait while comments are loading...