For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து விலக ஷெரிப்புக்கு 24 மணி நேர கெடு விதித்த காதிரி

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: நவாஸ் ஷெரிப்பை பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து விலக எதிர்க்கட்சியான பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சி தலைவர் தாஹிர் உல் காதிரி எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்று நவாஸ் ஷெரீப், அந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் தோல்வியைத் தழுவின.

Cleric Qadri issues 24-hour deadline for Nawaz Sharif to resign

திடீரென இப்போது தோற்ற இரு கட்சிகளும் சேர்ந்துகொண்டு, நவாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுவருகின்றன. பொதுத்தேர்தலில் பெருமளவு ஊழலை அரங்கேற்றி நவாஸ் ஷெரீப் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டதாக குற்றம் சாட்டி உள்ளன. இந்த இரு கட்சிகளும் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கடந்த 2 வாரமாக தலைநகர் இஸ்லாம்பாத்தில் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு உள்ளன.

போராட்டகாரர்களுக்கும், அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தாஹிர் உல் காதிரி, பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக 24 மணிநேர கெடு விதித்து உள்ளார்.

English summary
Amid Pakistan Army’s mediation efforts, protesters have stepped up pressure on the embattled government with cleric Tahir-ul-Qadri setting yet another deadline of 24 hours for Prime Minister Nawaz Sharif to quit
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X