உடம்புக்குள் ஒரு ஸ்டோர் ரூம்! வயிற்றில் இருந்த 233 பொருட்கள்.. மிரண்டுபோன டாக்டர்.. யார் சாமி இவர்?

Subscribe to Oneindia Tamil

அங்காரா: துருக்கி நாட்டில் ஆப்ரேஷன் சமயத்தில் 35 வயது இளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களைப் பார்த்து மருத்துவர்களே ஒரு நிமிடம் மிரண்டு போய்விட்டனர்.

பொதுவாகக் குழந்தைகள் தாங்கள் பார்க்கும் பொருட்களை எல்லாம் எடுத்துக் கடித்துப் பார்ப்பார்கள். சில சமயங்களில் அபாயகரமான பொருட்களை எடுத்து விழுங்கும் அபாயங்கள் கூட இருக்கிறது.

நீலகிரி, கோவையில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. ஜில் வானிலை அறிவிப்பு
அதுபோல சிறு பொருட்கள் அல்லது ஆபரணங்களை அவர்கள் விழுங்கிவிட்டால் உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்க வேண்டியது கட்டாயம். இல்லையென்றால் அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும்.

 மிரண்ட மருத்துவர்கள்

மிரண்ட மருத்துவர்கள்

குழந்தைகளாக இருக்கும் போது இதுபோன்ற கைகளில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் சாப்பிடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால், வளர்ந்த பின்னரும் ஒருவர் அப்படிச் செய்தால் என்ன ஆகும். அப்படியொரு சம்பவம் தான் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. அவரது வயிற்றில் இருக்கும் பொருட்களைப் பார்த்து, மருத்துவர்களே மிரண்டு போய்விட்டார்கள். அப்படி என்ன தான் இருந்தது பார்க்கலாம்!

துருக்கி

துருக்கி

துருக்கி நாட்டின் இபெக்கியோலு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி தொடரவே இது குறித்து அவர் தனது மூத்த சகோதரரிடம் தெரிவித்துள்ளார். முதலில் இது சாதாரண வயிற்று வலியாக இருக்கும் என்பதால் இது சீக்கிரம் சரியாகிவிடும் என்றும் அவர்கள் கருதி உள்ளனர். இருப்பினும், வயிற்று வலி தொடரவே அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுமதித்து உள்ளனர்.

 மொத்தம் 233 பொருட்கள்

மொத்தம் 233 பொருட்கள்

அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது, வயிற்றில் இருந்த பொருட்களைப் பார்த்ததும் டாக்டர்களுக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றிவிட்டதாம்! 35 வயதான அந்த இளைஞரின் வயிற்றில் மொத்தம் 233 பொருட்கள் இருந்ததைப் பார்த்து மருத்துவர்கள் ஆடிப்போய் விட்டனர். பழைய நாணயங்கள் தொடங்கி பேட்டரிக்கள், காந்தங்கள், கண்ணாடித் துண்டுகள், கற்கள் என எல்லாம் அவர் வயிற்றில் இருந்துள்ளது.

 ஆப்ரேஷன்

ஆப்ரேஷன்

இதையடுத்து அந்த நபருக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். 35 வயதான அந்த நபரின் வயிற்றை ஆப்ரேஷன் சமயத்தில் ஓப்பன் செய்து பார்க்கும்போது, வயிற்றுக்குள் ஒரு சிறிய ஸ்டோரேஜ் பாக்ஸே இருந்துள்ளது. இதைப் பார்த்தும் மிரண்டு போன மருத்துவர்கள் உள்ளே இருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் போட்டுள்ளனர். சில மணி நேரம் நீடித்த இந்த ஆப்ரேஷனில் அவரது வயிற்றில் இருந்து மட்டும் 233 பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

 மருத்துவர் விளக்கம்

மருத்துவர் விளக்கம்

இது தொடர்பாக அறுவைசிகிச்சை டாக்டர் பினிசி கூறுகையில், "ஆப்ரேஷன் சமயத்தில் வயிற்றுச் சுவரில் ஒன்று அல்லது இரண்டு நகங்களும் இருந்துள்ளது. பெருங்குடல் பகுதியில் இரண்டு உலோகத் துண்டுகள் மற்றும் இரண்டு கற்கள் இருந்தன. இது தவிர பேட்டரிகள், காந்தங்கள், நகங்கள், நாணயங்கள், கண்ணாடித் துண்டுகள் ஆகியவையும் உள்ளே இருந்தது. இந்த ஆப்ரேஷனில் அவரது வயிற்றையே நாங்கள் சுத்தம் செய்ய வேண்டியதாகிவிட்டது" என்று தெரிவித்தார்

 எப்படி

எப்படி

இதுபோன்ற கேஸ்கள் பெரும்பாலும் குழந்தைகளிடையே தான் இருக்கும். பெரியவர்கள் கண்டதை வாயில் போடுவது அரிதானவையே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மனநல பாதிப்பு உடையவர்கள், கைதிகள் ஆகியோர் தான் இதுபோல கையில் கிடைக்கும் அனைத்தையும் வாயில் போட்டுவிடுவார்கள். அவர் இதுபோன்ற பொருட்களை ஏன், எப்போது சாப்பிட்டார் உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+