மாடியில் இருந்து மருத்துவர் மீது விழுந்த நர்ஸ் பிழைத்தார் , மாண்டார் மருத்துவர்

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

கொலம்பியாவில் காலீ நகரில் ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்த ஒரு செவிலியர் மாணவி ஒரு மருத்துவரின் மீது விழுந்ததால் உயிர் பிழைத்துள்ளார். ஆனால், அந்த மருத்துவர் இறந்துவிட்டார்.

டெல் வேல் பல்கலைக்கழக மருத்துவமனையில் படித்து வந்த மருத்துவர் இசபெல் முனொஸ் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்தார்.

செவிலியர் மரியா இசபெல் கோன்சேலசுக்கு பல எலும்பு முறிவுகள் இருந்தாலும் அவர் தற்போது நிலையான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

என்ன காரணத்திற்காக இந்தச் சம்பவம் நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

''என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது,'' என மருத்துவமனை இயக்குனர் ஜுவான் கார்லோஸ் கொரல்ஸ் தெரிவித்தார்.

''எங்களுக்கு தெரிந்ததெல்லாம், இது ஒரு வருந்த்த்தக்க சம்பவம். இது ஒரு சிரமமான நிலை,'' என்று அவர் காலீ நகரத்தில் வெளியாகும் எல் பீஸ் ( El País ) பத்திரிகையிடம் தெரிவித்தார்.

மருத்துவர் மூனாஸ் உணவகத்திற்குச் செல்லும் வழியில் ஒரு முற்றத்தில் நடந்து கொண்டிருந்தபொது கோன்சலஸ் அவர் மீது விழுந்தார்.

"நாங்கள் பல முயற்சிகள் எடுத்தும், மருத்துவரின் மூளை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் அதிர்ச்சியில் காலமானார்," கோரேல்ஸ் கூறினார்.

பிற செய்திகள்

தீயிலிருந்து காப்பாற்ற குழந்தையை ஜன்னல் வழியே வீசிய தாய்

''பெண்கள் குண்டாக இருந்தால் குற்றமல்ல''

கானல் நீரானதா காவிரி நீர்? கைவிட வேண்டுமா குறுவை சாகுபடியை?

தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்

BBC Tamil
English summary
A student nurse in Colombia has survived a fall from the sixth floor of a hospital in the city of Cali after landing on top of a doctor.
Please Wait while comments are loading...