For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெண்டிலேட்டரில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்.. மரணம் என பரவிய தகவலால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். இவர் கடந்த 2001 முதல் 2008 வரை அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன? 5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன் சொன்னது என்ன?

இதற்கிடையே அவர் உடல்நிலை கடந்த சில வாரங்களாக மோசமடைந்து வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 பர்வேஸ் முஷாரப்

பர்வேஸ் முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வெள்ளிக்கிழமை காலமானார் என்ற செய்தி பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல ஊடகமான வக்த் நியூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பர்வேஸ் முஷாரப்பின் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தது. இருப்பினும், அந்த ட்வீட் சில நிமிடங்களில் நீக்கப்பட்டது.

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இதற்கிடையில், பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், பர்வேஸ் முஷாரஸின் மறைவுச் செய்தி "உண்மையல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார். முஷாரப் இப்போது வென்டிலேட்டர் உதவி உடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அவரது உடல்நிலை குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பிரார்த்தனை

பிரார்த்தனை

இது குறித்து பர்வேஸ் முஷாரப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அவர் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 வாரங்களாக அவரது நோய் சிக்கலானதாக மாறியது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கி உள்ளது. அவரது அன்றாட வாழ்க்கை எளிதாக இருக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யார் இந்த பெர்வேஸ் முஷாரஃப்

யார் இந்த பெர்வேஸ் முஷாரஃப்

பெர்வேஸ் முஷாரஃப் 1999இல் பிரதமர் நவாஸ் செரிபின் ஆட்சியைக் கலைத்து ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கவிழ்த்து அதிபரானார். இவர் 2001ஆம் ஆண்டு முதல் 2008 வரை பாகிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்தார். ஆட்சியில் இருந்த சமயத்தில் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2008இல் அவர் அதிபர் பதவியில் இருந்த விலகினார்,

English summary
Confusion prevails over former Pakistan President Pervez Musharraf's death news
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X