For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆராய்ச்சி செய்கிறோம்.. கொரோனா பற்றி முதல்முறையாக மௌனம் கலைத்த வுஹன் சோதனை மையம்.. என்ன சொன்னது?

கொரோனா வைரஸ் குறித்து வுஹன் ஆராய்ச்சி மையம் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து நிறைய கேள்விகள், சந்தேகங்கள் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து வுஹன் ஆராய்ச்சி மையம் முதல்முறையாக மௌனம் கலைத்துள்ளது.

Recommended Video

    கொரோனா பற்றி முதல்முறையாக மௌனம் கலைத்த வுஹன் சோதனை மையம்

    கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து பெரிய அளவில் உலகம் முழுக்க சந்தேங்கங்களும் கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த கொரோனா வைரஸ் இயற்கையானது, வுஹன் மார்க்கெட்டில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி உள்ளது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது.

    சீனாவில் உள்ள வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம். அங்கிருந்து ஊழியர்கள் மூலம் இந்த வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று புகார் வைக்கப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு

    அமெரிக்கா விசாரிக்கிறது

    அமெரிக்கா விசாரிக்கிறது

    இந்த கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து அமெரிக்கா விசாரிக்க தொடங்கி உள்ளது. வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா வெளிப்படையாக குற்றம்சாட்ட தொடங்கி உள்ளது. சீனா இது தொடர்பான விஷயங்களை மறைகிறது. கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து சீனா வேண்டும் என்றே மறைத்து இருந்தால் அந்த நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    மௌனம் கலைத்தது

    மௌனம் கலைத்தது

    இதுகுறித்து வுஹன் ஆராய்ச்சி மையம் முதல் முறையாக மௌனம் கலைத்துள்ளது. வுஹன் வைராலஜி ஆராய்ச்சி மையத்தின் பி4 லேப் எனப்படும் பாதுகாக்கப்பட்ட லேபில் இருந்துதான் இந்த வைரஸ் பரவி இருக்கும் என்று செய்திகள் பரவிய வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் இந்த பி4 லேபின் இயக்குனர் யுவான் சிமிங் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதில், இந்த கொரோனா வைரஸ் எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கசிந்து இருக்க வாய்ப்பே இல்லை.

    கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை

    கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லை

    எங்கள் ஆராய்ச்சி மையத்தில் யாருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தாக்கவில்லை. அப்படி இருக்கும் போது எங்கள் ஆராய்ச்சி மையத்தில் இருந்து இந்த வைரஸ் வெளியாகி இருக்கலாம் என்று கூறுவது தவறு. நாங்கள் கொரோனா குறித்து நிறைய ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். பல்வேறு வகையான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம்.

    மிகவும் பாதுகாப்பானது

    மிகவும் பாதுகாப்பானது

    எங்கள் ஆராய்ச்சி மையம் மிகவும் பாதுகாப்பானது. இங்கிருந்து எந்த விதமான வைரஸ் வெளியேறவும் வாய்ப்பு இல்லை. தேவையில்லாமல் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். அதற்கு வாய்ப்பே இல்லை. எங்களுக்கு என்ன ஆராய்ச்சிகளை செய்கிறோம் என்று தெரியும். அதை எப்படி செய்கிறோம் என்றும் தெரியும். எங்கள் ஆராய்ச்சி மையம் வுஹனில் இருக்கிறது என்பதாலேயே அதை கொரோனாவுடன் தொடர்பு படுத்த கூடாது.

    அமெரிக்கா தவறு செய்கிறது

    அமெரிக்கா தவறு செய்கிறது

    மக்களை தவறாக சிலர் வழி நடத்துகிறார்கள். அமெரிக்க ஊடங்கங்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது. அல்லது ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிடுகிறது. கொரோனா குறித்தோ அல்லது இந்த ஆராய்ச்சி மையம் குறித்தோ எங்களுக்கு மறைக்க ஒன்றும் இல்லை. நாங்கள் பொதுவான வைரஸ் ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். இது தொடர்பாக உலக சுகாதார மையத்திடம் அறிக்கை சமர்பித்துள்ளோம் என்று பி4 லேபின் இயக்குனர் யுவான் சிமிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    Coronavirus: Wuhan Lab slams the accusations on the origin of the COVID-19 from their laboratory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X