ஆக்ஸிஜன் பற்றாக்குறை... அவசரஅவரசமாக தரையிறங்கிய அமெரிக்க விமானப்படை வீரர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானப்படை பயிற்சி வீரர்கள் அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணத்தில் உள்ள லூக் விமானப் படைத்தளத்தில் விமானப் படை வீரர்கள் எஃப்35 ரக போர் விமானங்களில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீரர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் பயிற்சியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அவசர அவசரமாக தரையிறங்கினர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

5 முறை அரங்கேறியது

5 முறை அரங்கேறியது

மே இரண்டாம் தேதி முதல் இதுவரை இதுபோன்று 5 சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தற்போது 55எஃப் மற்றும் 35ஏ ஜெட் விமானங்கள் மூலம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம்

வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம்

இதனால் வீரர்களின் பயிற்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும் விமானப்படை செய்தி தொடர்பாளர் ரெபேக்கா கூறினார்.
மேலும் தங்களின் வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்படுமோ அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.

மூன்ற ரகங்களில் வருகிறது

மூன்ற ரகங்களில் வருகிறது

எஃப்35 ரக விமானங்கள் மூன்ற ரகங்களில் வருவதாகவும், எஃப் 35ல் தான் இந்த பிரச்சனை உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவை செங்குத்தான நிலையில் தரையிறக்கப்படும் வகையில் உள்ளதாகவும் விமானப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரலாற்றிலேயே அதிக விலை

வரலாற்றிலேயே அதிக விலை

இந்த எஃப் 35 ரக விமானங்கள் வரலாற்றிலேயே அதிக விலை கொண்டது என்றும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். 2443 விமானங்கள் வாங்க 379 பில்லியன் டாலர் செல்வானதாகவும் அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கூறினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The US Air Force has temporarily grounded dozens of F-35 stealth fighters while it investigates an oxygen supply issue aboard the expensive planes, officials said Monday.
Please Wait while comments are loading...