For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழுபோதையில் மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள்.. அமெரிக்காவில் அதிசயம்.. இதான் 2.0 கதையோ!

அமெரிக்காவில் பறவைகள் போதையில் மக்களை தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் முழுபோதையில் மனிதர்களை தொல்லை செய்யும் பறவைகள் | வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் பறவைகள் போதையில் மக்களை தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியை சேர்ந்த கில்பெர்ட் பகுதி போலீஸ், அங்கிருந்த மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி உங்கள் தெருவில் இருக்கும் பறவைகள் போதைக்கு உள்ளாகி இருக்கிறது.

    அவை உங்களை தொல்லை செய்யும். கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள் என்றது. இது ஒன்னும் 2.0 படத்தின் கதை கிடையாது, காக்கா கெட்டவனாக மாறி பிரச்சனை செய்ய, இது அமெரிக்காவில் உண்மையாக நடக்கிறது.

    [ H-2-O என்றால் என்ன? வங்கதேசம் அழகியின் அதிர வைத்த ஷாக் பதில் ]

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியை சேர்ந்த கில்பெர்ட் பகுதியில் பறவைகள் திடீர் என்று மக்களை வந்து மோதி, தலையில் நின்று தொந்தரவு செய்துள்ளது. மூடி இருக்கும் கதவை வந்து மோதி மோதி தொந்தரவு செய்துள்ளது. அதோடு காருக்குள் புகுந்து அப்படியே பயணமும் செய்து இருக்கிறது. இது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

    புகார் அளிக்கப்பட்டது

    புகார் அளிக்கப்பட்டது

    இது தொடரவே அந்த பகுதி மக்கள் போலீசுக்கு புகார் அளித்து இருக்கிறார்கள். அதன்படி எங்களை பறவை தொந்தரவு செய்கிறது, என்ன பிரச்சனை என்று விசாரியுங்கள் என்று புகார் அளித்துள்ளனர். அந்த விசாரணையின் முடிவில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது. அதன்படி அந்த பறவைகள் எல்லாம் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    போதையில்

    போதையில்

    ஆம் அந்த பறவைகள் போதையில்தான் இப்படி மக்களை தொந்தரவு செய்துள்ளது. ஆனால் மதுக்கடையில் சென்று ஒரு ''காக்டெயில் ஷாட்'' சொல்லிவிட்டு இந்த பறவைகள் போதை ஆகவில்லை. அங்கு இருக்கும் புளித்த பழங்களை சாப்பிட்டுவிட்டு இப்படி போதை ஆகியுள்ளது. ஆம், அந்த பகுதியில் நிறைய பழங்கள் புளித்து போய் இருப்பதாக கூறப்படுகிறது.

    சரியாகுமா

    சரியாகுமா

    இந்த புளித்த பழங்கள் இரண்டு நாளை வரை கூட பறவைகளுக்கு போதையை கொடுக்கும். அதன்பின் அது சரியாகிவிடும். இந்த மாதிரி சம்பவங்கள் ஏற்கனவே பல முறை உலகில் நடந்து இருக்கிறது. ஆனால் மக்களுக்கு தெரியாது என்று பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

    English summary
    Drunken birds in America disturbing people. People filed a complaint on the police station,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X