For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாயில் விரைவில் உருவெடுக்கப் போகும் “மால் ஆப் தி வேர்ல்ட்”!

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் சுற்றுலாப் பயணிகளுக்காக மிதமான வெப்பநிலையுடன் கூடிய புதிய செயற்கை நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

அங்கு உலகிலேயே மிகப் பெரிய மால் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது.

துபாயில் அமைக்கப்பட இருக்கும் இப்புதிய நகரில் ஹோட்டல்கள், பார்க், திரையரங்குகள் ஆகியவையும் இடம்பெற உள்ளன.

கிளிட்ஸி எமிரேட்ஸ்:

கிளிட்ஸி எமிரேட்ஸ்:

ஏற்கனவே துபாயின் மிகப்பெரிய வணிக வளாகமான கிளிட்ஸி எமிரேட் அதன் சிறப்பான வர்த்தக இடங்களுக்காகவே அனைவருக்கும் பிடித்தமான இடமாக விளங்குகின்றது.

உலகின் வர்த்தக மையம்:

உலகின் வர்த்தக மையம்:

அந்நிறுவனம்தான் தற்போது "மால் ஆப் தி வேர்ல்ட்" என்ற பெயரில் இந்தப் புதிய வர்த்தக அரங்கத்தை கட்டமைக்க உள்ளது.

48 மில்லியன் சதுர அடி:

48 மில்லியன் சதுர அடி:

இந்த முழு வர்த்தக மையமும் கிட்டதட்ட 48 மில்லியன் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது என்று துபாயின் மிகப்பெரிய கட்டுமானத் துறையான துபாய் கோல்டிங் என்னும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னரின் நிறுவனம்:

மன்னரின் நிறுவனம்:

இந்நிறுவனமானது துபாய் மன்னரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டுமிற்கு சொந்தமானதாகும்.

கண்ணாடி “தீம் பார்க்”:

கண்ணாடி “தீம் பார்க்”:

இந்த திட்டத்தின்படி மிகப்பெரிய தீம் பார்க் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அது முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்டு குளிர்காலத்தில் கூட செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏசியுடன் நடைபாதைகள்:

ஏசியுடன் நடைபாதைகள்:

மேலும், முழுவதுமாக குளிரூட்டப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட உள்ளன.

சர்வதே சுற்றுலா மையம்:

சர்வதே சுற்றுலா மையம்:

"எங்களுடைய குறிக்கோளானது சுற்றுலாவை விட பெரியதானது. அதனால், துபாயை நாங்கள் சர்வதே அளவிற்கு சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற விரும்புகின்றோம்" என்று ஷேக் முகமது கூறியுள்ளார்.

2020க்கும் அமல்:

2020க்கும் அமல்:

மேலும், இத்திட்டத்தால் கோடைக்காலத்தில் கூட வெப்பநிலையானது கட்டுக்குள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்திற்கு சுமார் 180 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்திட்டமானது வரும் 2020க்குள் முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகின் மிகப்பெரிய கட்டிடம்:

உலகின் மிகப்பெரிய கட்டிடம்:

துபாய் நகரமானது அதனுடைய மிகப்பெரிய வர்த்தக மையங்களுக்காகவும், ஹோட்டல்களுக்காகவும் பெயர் போன ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா இங்குதான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Dubai is planning to build a temperature-controlled city featuring the world's largest mall and an indoor park, as well as hotels, health resorts and theatres, the developer said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X