சுற்றுலா பயணி தவறவிட்ட ‛வாட்ச்’.. நேர்மையாக ஒப்படைத்த இந்திய சிறுவன்.. துபாய் போலீஸ் பாராட்டு
துபாய்: துபாயில் சுற்றுலா பயணி தவறவிட்ட வாட்சை இந்திய சிறுவன் எடுத்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து துபாய் போலீசார் இந்திய சிறுவனை அழைத்து பாராட்டி உள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த சிறுவன் முகமது அயன் யூனிஸ். இவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் முகமது அயன் யூனிஸ் தனது தந்தையுடன் வெளியே சென்றார்.

இந்த வேளையில் அதிக மதிப்பு கொண்ட வாட்ச் ஒன்று கீழே கிடந்தது. இதனை முகமது அயன் யூனிஸ் பார்த்தார். உடனடியாக அவர் அந்த வாட்ச்சை எடுத்தார்.
விலை அதிகம் இருந்தாலும் கூட அந்த வாட்ச்சை முகமது அயன் யூனிஸ் தானே வைத்து கொள்ள விரும்பவில்லை. மாறாக அவர் அந்த வாட்ச்சை போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் அந்த வாட்ச் தொடர்பாக ‛ஸ்மார்ட் காவல் நிலையத்தின்’ இணையதள பக்கத்தில் பதிவிட்டார்.
அதாவது துபாயில் போக்குவரத்து நெரிசலை மேற்பார்வை செய்யவும், தொலைந்த பொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் 'ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஆன்லைன் சேவை உள்ளது. இதில் தான் முகமது அயன் யூனிஸ் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து துபாய் காவல் துறை அதிகாரிகள் முகமது அயனிடமிருந்து கைக்கடிகாரத்தைப் பெற்றுக் கொண்டனர்.
மேலும் அந்த வாட்ச் என்பது துபாய்க்கு வந்த சுற்றுலா பயணிக்கு சொந்தமானது என்பதும், அந்த வாட்ச்சை அவர் துபாயில் தொலைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாட்ச் சுற்றுலா பயணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சிறுவன் முகமது அயன் யூனிசை துபாய் போலீசார் நேரில் பாராட்டினர்.
முகமது அயன் யூனிசை துபாய் உயர் போலீஸ் அதிகாரிகள் சந்தித்து பாராட்டு சான்று வழங்கினர். சுற்றுலா காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் கல்பான் ஒபீட் அல் ஜல்லாஃப் உள்பட உயரதிகாரிகள் சிறுவனை பாராட்டினர். மேலும் அவரது போட்டோவை போலீசார் துபாய் போலீசின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பெருமைப்படுத்தினர். அதில், ‛ நேர்மைக்கு முன்னுதாரணமாக விளங்கிய இந்திய சிறுவன் முகமது அயன் யூனிஸை துபாய் போலீஸ் மனதார பாராட்டி கவுரவிக்கிறது’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications