ஆடிய கட்டிடங்கள்.. வீதிகளுக்கு ஓடிய பொதுமக்கள்.. சீனாவின் திக் திக், நில நடுக்க வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிச்சுவான்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் ஆடின. மக்கள் அச்சத்துடன் வீட்டை விட்டு சாலைகளுக்கு ஓடி வந்தனர். அப்போது செல்போனில் எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

Earthquake in China

அந்த வீடியோவில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சீனாவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீட்டில் உள்ள அலங்கார விளக்குகள், பாத்திரங்கள், அலமாரிகள் என அனைத்துத் தடதடவென ஆடியன.
பீதி அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து தங்களது குழந்தைகளை தூக்கிக் கொண்டு பதறி அடித்து வெளியே ஓடி வரும் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், நிலநடுக்கத்தால் சாலையின் தடுப்புச் சுவர்கள் உடைந்துள்ளன. சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக் கிடக்கின்றன. சாலை பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இரவு நேரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A magnitude 7 earthquake has struck central China, the US Geological Survey reports. Viral video here.
Please Wait while comments are loading...