For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா? எலானுக்கு 30 அடியில் வெள்ளி சிலை.. ஆட்குறைப்பால் புலம்பும் பணியாளர்கள்

Google Oneindia Tamil News

ஓட்டாவா: கனடாவில் எலான் மஸ்கிற்கு வெள்ளியால் சிலை வைக்கப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

கனடாவின் சிறப்பக் கலைஞர்களான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். எலான் மஸ்கை கவுரவிக்கும் விதமாக இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 40 அடி உயரம் உள்ள இந்த சிலையின் மதிப்பு ரூ.4.9 கோடியாகும். இந்த சிலையின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்..அலுவலகத்திலேயே படுத்து உறங்கிய பெண் ஊழியர்.. வேலை என்னாச்சு தெரியுமா?ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்..அலுவலகத்திலேயே படுத்து உறங்கிய பெண் ஊழியர்.. வேலை என்னாச்சு தெரியுமா?

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கையிலெடுத்ததிலிருந்து எலான் மஸ்க் தற்போது வரை பரவலாக பேசப்பட்டு வருகிறார். இதற்கு முன்னர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் சார்பில் பல புதிய சாதனைகளை செய்திருந்தாலும், டிவிட்டரை வாங்குவதில் ஏற்பட்ட சர்ச்சைகள் இவர் மீது அனைவரின் கவனத்தையும் குவியச் செய்தது. இந்நிலையில், தற்போது இவரது ரசிகர்கள் இவருக்கு வெள்ளி சிலையை செய்து இவரை மேலும் பிரபலமானவராக ஆக்கியுள்ளனர். மேற்குறிப்பிட்டதைப் போல சுமார் 40 அடி உயரம் உள்ள இந்த சிலையின் மதிப்பு ரூ.4.9 கோடியாகும். இந்த சிலையின் வடிவமைப்பு சிறப்பாக உள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

சிற்பம்

சிற்பம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளை நினைவுகூரும் விதமாக இந்த வெள்ளி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் மீது மஸ்க் உட்கார்ந்திருப்பதை போல இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த சிறப்பக் கலைஞர்களான கெவின் மற்றும் மிச்செல் ஸ்டோன் இந்த சிலையை வடிவமைத்துள்ளனர். இதன் மூலம் மஸ்க்கின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சிற்பத்தில் எலான் மஸ்கின் தலை மட்டும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 கிரிப்டோ

கிரிப்டோ

அதாவது கிரிப்டோகரன்சியின் லோகோவை போன்று இந்த தலை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள எலான் மஸ்கின் கவனத்தை ஈர்க்க இது போன்று ஏதாவது செய்வதுண்டு. அந்த வரிசையில் இந்த சிற்பம் செய்யப்பட்டுள்ளதாக டிவிட்டர் பயனாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை இது எலான் மஸ்க் கவனத்திற்கு சென்றால் இதனை அவர் வாங்கலாம் என்று சொல்லப்படுகிறது. சிலர் இது எலானுக்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எப்படியாயினும் இந்த சிலையை வடிவமைத்தவர்களின் கலை திறனை பாராட்டாமல் இருக்க முடியாது என டிவிட்டரில் இந்த சிலை பகிர்ந்து பயனர்கள் கருத்து தெரிவித்த வருகின்றனர்.

அதிரடி

அதிரடி

என்னதான் சிலை செய்தாலும், மஸ்க்கின் போக்கு சமீப நாட்களாகவே அதிரடியாகவே இருந்து வருகிறது என்று சிலர் விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக டிவிட்டரை வாங்கிய மஸ்க் இந்திய வம்சாவளியான பராக் அகர்வால் உட்பட பலரை நீக்கி ஆட்குறைப்பு செய்தது, பணியாளர்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' வசதியினை ரத்து செய்தது போன்றவை விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றொரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, இனி வாரத்தில் 40 மணி நேரம் கட்டாயம் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. இப்படி அதிரடி அறிவிப்பால் பணியாளர்கள் ஒருபுறம் கதிகலங்கி போய் இருக்க, மறுபுறம் அவரது ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து கொண்டாடி வருகின்றனர்.

English summary
A silver statue of Elon Musk in Canada has caught everyone's attention. Videos related to this are going viral on social media. Canadian artists Kevin and Michelle Stone designed the statue. The statue is said to be designed as a tribute to Elon Musk. The statue, which is about 40 feet tall, is worth Rs 4.9 crore. Everyone is appreciating that the design of this statue is excellent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X