ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழாவில் டாக்டர் அருள் அமுதன், நியாண்டர் செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, டாக்டர் அருள் அமுதனும், நியாண்டர் செல்வனும் பங்கேற்கிறார்கள்.

சித்த மருத்துவர் அருள் அமுதன்

மருத்துவர் முனைவர் அருள் அமுதன் சித்தமருத்துவத்தில் எம்டி பட்டம் பெற்றவர். மருந்தாக்கவியலில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். யோகா கலையில் முதுகலைப்பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிகிறார்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Doctor Arul Amuthan Paleo Diet Specialist Niyandar Selvan and is a Chief gust.

தமிழ் மரபில் வந்த சித்தமருத்துவத்தின் நன்மைகளையும் அதுகுறித்த வரலாற்றுத் தகவல்களையும் மருத்துவம் சார்ந்த தகவல்களையும், அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு வரும் ஆர்வலர்களுக்குத் தம் இணையமர்வின் வாயிலாகத் தரவிருக்கிறார்.

உடல்நலம் சார்ந்த வினாக்களுக்கு சித்தமருத்துவரிடமிருந்து உரிய தகவலைப் பெற்றுக் கொள்ள விரும்புவர்கள், விழாவில் பங்கேற்றுப் பயனுறலாம். இவரின் சித்த மருத்துவ கருத்தரங்கம் வரும் ஜூலை 1ம் தேதி நடைபெறுகிறது.

நியாண்டர் செல்வன் - பேலியோ ஸ்பெஷலிஸ்ட்

நியாண்டர் செல்வன், வணிக நிர்வாகத் துறையில் முனைவர் பட்டம் பெற்று, அமெரிக்காவில் நிர்வாகவியற்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

வரலாறு, உணவு, உடல்நலன், அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி கடந்த பத்து ஆண்டுகளாக வலைப்பதிவிலும், ஃபேஸ் புக்கிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். ஃபேஸ் புக்கில் 'ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு' எனும் உடல்நலன் சார்ந்த இணையக் குழுமத்தை நடத்தி வருபவர்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, Doctor Arul Amuthan Paleo Diet Specialist Niyandar Selvan and is a Chief gust.

இக்குழுவில், ஆதிமனிதன் உண்ட உணவை ஒட்டிய உணவுமுறை மூலம் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான உணவுப்பழக்க முறைகளும் தீர்வுகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க தமிழ்த் திருவிழாவில், இவரும் ஓர் இணைப்பயிலரங்கு நடத்தவுள்ளார்.

ஆர்வலர்கள் பங்கேற்றுப் பயனுறலாம். இவரின் பேலியோ உணவுமுறைக் கருத்தரங்கம் வரும் ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. மேலும் வரும் 30 ம் தேதி மாலை 6 மணிக்கு வரவேற்பு விருந்து நிகழ்விலும் நியாண்டர் செல்வன் பங்கேற்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, doctor Arul Amuthan Paleo diet specialist Niyandar Selvan is a Chief gust at Minneapolis Convention Center in Minnesota.
Please Wait while comments are loading...