For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிதூள்! இன்று தொடங்கும் கால்பந்து உலக கோப்பை.. கொண்டாடி தீர்க்க தாயாராக இருக்கும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

கத்தார்: ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

கால்பந்து ரசிகர்களின் சுமார் 4 ஆண்டுகள் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்து உள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று கத்தாரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் களமிறங்குகின்றன. இதற்காக உலகின் அனைத்து நாடுகளிலும் இருந்தும் கத்தாருக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

கத்தார் உலகக்கோப்பை.. சாதித்த தமிழக ஸ்ட்ரீட் கால்பந்து அணி! வீராங்கனைகளை வாழ்த்திய முதலமைச்சர்கத்தார் உலகக்கோப்பை.. சாதித்த தமிழக ஸ்ட்ரீட் கால்பந்து அணி! வீராங்கனைகளை வாழ்த்திய முதலமைச்சர்

 உலகக் கோப்பை

உலகக் கோப்பை

கால்பந்து உலகக் கோப்பை இதுவரை மத்திய கிழக்கு நாடுகளில் நடந்ததே இல்லை. இதனால் உலகக் கோப்பையை கத்தார் அணி எப்படி நடத்தும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேபோல கத்தார் உலகக் கோப்பையில் இதுவரை கலந்து கொண்டதும் இல்லை. போட்டிகளை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் கத்தார் முதல்முறையாக உலகக் கோப்பை தொடருக்குத் தேர்வாகி உள்ளது.

 தொடக்க நிகழ்ச்சி

தொடக்க நிகழ்ச்சி

உலகின் மிகப்பெரிய கால்பந்து தொடரான இதன் தொடக்க விழா இன்று கோலாகலமாக நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தொடக்க நிகழ்ச்சிகள் இந்திய நேரப்படி 7.30 மணிக்குத் தொடங்குகிறது. உலகக் கோப்பை போட்டிகளுக்காக உலகெங்கும் இருந்து ரசிகர்கள் கத்தார் குவிந்து வரும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படு செய்யப்பட்டு உள்ளது.

 முதல் போட்டி

முதல் போட்டி

இன்று நடைபெறும் முதல் போட்டியில் கத்தார் அணி ஈக்வடாரை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டிகள் இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. . உலக கோப்பையில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், அவை 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.. லீக் பிரிவில் ஒவ்வொரு க்ரூபிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் க்ரூப் ஆப் 16 சுற்றுக்குத் தகுதி பெறும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதன் பின்னர், காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி வரும் டிச. 18ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு நடைபெறும். இந்த உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மீதே அனைவரது கண்களும் இருக்கும். அதை்த தாண்டி ஜெர்மனி, ஸ்பெயின், உருகுவே, இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், போர்ச்சுகல், குரோஷியா ஆகிய அணிகள் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது.

English summary
Qatar world cup is to beign today FIFA World Cup 2022: All thigs to know about Qatar world cup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X