நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 40 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நேபாளத்தில் விமான விபத்து-வீடியோ

  காத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  வங்கதேசத்தை சேர்ந்த பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 71 பேருடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது.

  நேபாளத்தின் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு விமானம் முற்பட்டது. அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் மோதியது.

  17 பேர் படுகாயம்

  17 பேர் படுகாயம்

  இதில் விமானம் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  தீயணைப்பு வீரர்கள்

  தீயணைப்பு வீரர்கள்

  விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானம் தீப்பற்றியதை அறிந்த திரிபுவன் விமான நிலைய தீயணைப்பு ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.

  40 பேர் பலி

  40 பேர் பலி

  இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை துண்டித்து எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

  விமான நிலையம் மூடல்

  விமான நிலையம் மூடல்

  மோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு திரிபுவன் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Flight accident in Nepal. 40 passangers dead. 17 injured rescued.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற