இஸ்ரேலின் கிரைசாந்துமன் வகை மலருக்கு மோடி பெயர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெருசலம்: இஸ்ரேலில் கிரைசாந்துமன் வகையைச் சேர்ந்த மலர் ஒன்றுக்கு பிரதமர் மோடி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மூன்றுநாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பென் குரியான் விமான நிலையத்துக்கு நேரில் சென்று பிரதமர் மோடியை வரவேற்றார்.

Flower breed named after Modi in Israel

இதையடுத்து பிரதமர் மோடி, ஜெருசலேமில் உள்ள டேன்சிகர் பூ பண்ணைக்கு வருகை புரிந்தார். அங்குள்ள மலர்களை அவர் பார்வையிட்டார்.

மோடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இஸ்ரேலின் கிரைசாந்துமன் வகையைச் சேர்ந்த பூ ஒன்றுக்கு மோடி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Crysanthumun flower will be named in honour of PM narendra modi. The flower will be called 'Modi.'
Please Wait while comments are loading...