மூன்றாவது அலையே ஓயல.. கொரோனா நான்காவது அலை பிரான்சில் வரப்போகுதாம்.. காரணம் டெல்டா!
பாரிஸ்: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசால் பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரெஞ்சு அரசின், முன்னணி அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார்.
பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டங்களால், வைரஸின் இந்த புதிய அலையின் விளைவு குறையலாம். மருத்துவ நிபுணர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பிரான்சை 4வது அலை தாக்கும் என்று கருதுகின்றனர்.

"பிரான்சில் நான்காவது அலை தாக்குதல் இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் இது முந்தைய மூன்று அலைகளை விட மிகவும் மிதமானதாக இருக்கும், ஏனெனில் தடுப்பூசிகளின் அளவு முன்பை ஒப்பிடும்போது இப்போது அதிகமாக உள்ளது" என்று டெல்ஃப்ரைஸி பிரான்ஸ் வானொலியில் கூறியுள்ளார்.
அறிவியல் விஷயங்களில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் பிரெஞ்சு தொற்றுநோயியல் நிபுணர் அர்னாட் ஃபோண்டனெட் பி.எஃப்.எம் டிவியிடம், இன்று அளித்துள்ள பேட்டியில், பிரான்சின், கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை செப்டம்பர் அல்லது அக்டோபரில் மீண்டும் உயரும் என்று, தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
பிரெஞ்சு சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் இந்த வார தொடக்கத்தில் அளித்த பேட்டியிலேயே, இதற்கான முன்னெச்சரிக்கையை தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், கொரோனா டெல்டா வைரஸ், உலகெங்கிலும் வேகமாகப் பரவியுள்ளது. சில நாடுகளை விமான பயண கட்டுப்பாடுகளை அதிகரிக்க வைத்துள்ளது. பிரான்சின் கொரோனா கேஸ்களில் 20% டெல்டா வகை வைரசால் ஏற்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications