சாரா ஆப்புக்கு ஆப்பு வைத்த கூகுள்.. இனி மொட்டை கடுதாசி அனுப்ப முடியாது.. அதிரடியாக தூக்கியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சாரா ஆப்பை தடை செய்த கூகுள்- வீடியோ

  சென்னை: சாரா அப்ளிகேஷன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. சரியாக ஒரு வருடத்திற்கு முன்புதான் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  இந்த அப்ளிகேஷனுக்கு இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க நிறைய பயனாளிகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த அப்ளிகேஷன் தூக்கப்பட்டு இருக்கிறது.

  இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக நிறைய புகார்கள் சமீப காலமாக வந்து கொண்டு இருந்தது. அதன் காரணமாகவே இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது.

  கொண்டாட்டம்

  கொண்டாட்டம்

  இந்த அப்ளிகேஷன் வந்த ஒரே வாரத்தில் உலகம் முழுக்க வைரல் ஆனது. ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் இதன் மூலம் எளிதாம் மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால் யார் அனுப்புகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதை வைத்து ஜாலியாக தங்கள் காதலை, ஆசையை, கோபத்தை எல்லாம் சொல்லி மக்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

  வளர்ந்தது

  வளர்ந்தது

  இதனால் நாளுக்கு நாள் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இந்த அப்ளிகேஷன் சவுதி அரேபியாவில் உருவாக்கபட்டது. 300 மில்லியன் மக்கள் இதை பயன்படுத்தி வந்தார்கள். 30க்கும் அதிகமான நாடுகளில் இந்த ஆப் செயல்பட்டு வந்தது.

  தவறான பாதை

  தவறான பாதை

  இந்த அப்ளிகேஷன் மூலம் சில தவறான விஷயங்கள் நடந்து இருக்கிறது. யார் அனுப்புகிறார்கள் என்ற தெரியாத காரணத்தால் பெண்களுக்கு நிறைய மிரட்டல்கள் சென்றுள்ளது. பிரபலங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு பள்ளி மாணவி இதனால் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.

  பெரிய அளவில் குற்றச்சாட்டு

  பெரிய அளவில் குற்றச்சாட்டு

  இதற்கு எதிரான அமெரிக்காவை சேர்ந்த கோலின்ஸ் என்பவர் ''சேஞ்ச்.ஓஆர்ஜி'' என்ற மாற்றத்திற்க்கான இணைய அமைப்பில் புகார் அளித்து இருந்தார். இந்த அப்ளிகேஷன் பாதுகாப்பிற்கு எதிரானது என்று புகார் அளித்தார். உடனே இதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

  எதிரான வாக்குகள்

  எதிரான வாக்குகள்

  அவரே எதிர்பார்க்காத வகையில் இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். 470,000 பேர் இந்த அப்ளிகேஷனுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மிகவும் குறைவு.

  நீக்கப்பட்டது

  நீக்கப்பட்டது

  இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு காரணமாக இந்த அப்ளிகேஷன் நீக்கப்பட்டு இருக்கிறது. பல நாடுகளின் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது. தற்போது இந்தியாவிலும் நீக்கப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Google play store removes Sarahah application form its site. 470,000 raised complaint against it, says that it is bullying app. So that Google took immediate action on this and removed the app.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற