For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனிதத்தைக் கொன்று புதைத்த ஹிரோஷிமா பேரழிவின் 69 ஆவது நினைவு தினம்.. இன்று!

Google Oneindia Tamil News

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமாவை அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாது.

1945 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்காவின் வெறித்தனமான அணுகுண்டு வீச்சுக்குப் பலியான பரிதாப நகரம்.

அதன் 69 ஆவது நினைவு தினம்தான், வலிகளை நினைவுகூறத்தக்க வகையில் இன்று அனுசரிக்கப்படுகின்றது.

அமைதிப் பூங்கா:

அமைதிப் பூங்கா:

ஹிரோஷிமாவின் அமைதிப்பூங்காவில் இந்த நினைவு தினம் மக்களால் அனுசரிக்கப்படுகின்றது.

அஞ்சலி நாள்:

அஞ்சலி நாள்:

அணுகுண்டு தாக்குதலில் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், அமைதி காவலர்கள், அதிகாரிகள், ஜப்பான் பிரதமர் ஷின்சோ ஏப் மற்றும் அமெரிக்க தூதரான கரோலின் கென்னடி, ஹிரோஷிமா மேயர் காஷுமி மட்சுயி ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

நல்லிணக்கம் தேவை:

நல்லிணக்கம் தேவை:

"அணு யுத்தத்தை அழிக்க வேண்டும் என்றால் எல்லா வேறுபாடுகளையும் கடந்து நாடுகளுக்கு இடையில் நல்லிணக்கம் இருக்க வேண்டும். மனிதத்தின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும்" என்று மட்சுயி கூறியுள்ளார்.

அமைதி மலரட்டும்:

அமைதி மலரட்டும்:

"ஒரு நாட்டின் அமைதியையும், செயலையும் நாம் கண்டிப்பாக சரியான வழியில் மேற்கொள்ள வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

தலைமுறைகள் அழிய வேண்டாம்:

தலைமுறைகள் அழிய வேண்டாம்:

ஜப்பான் பிரதமர், "அணுகுண்டு தாக்குதலுக்கு பலியான நாடு என்ற முறையில் ஜப்பானுக்கு அணு ஆயுதங்களால் ஏற்படும் அழிவுகளைத் தடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. இதுபோன்றவைகளால் மற்ற எந்த தலைமுறையும் பாதிக்கப்படக் கூடாது" என்று கூறியுள்ளார்.

லிட்டில் பாய்:

லிட்டில் பாய்:

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை சரணடைய வைப்பதற்காக அமெரிக்கா லிட்டில் பாய் என்ற யுரேனிய அணுகுண்டினை ஹிரோஷிமா மீது வீசியது.

14,000 பேர் பலி:

14,000 பேர் பலி:

ஆகஸ்ட் மாதம் இதே நாளில் நடைபெற்ற இத்தாக்குதலில் 14,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதனுடைய கதிர்வீச்சு தாக்குதலால் இன்று வரையில் அம்மக்கள் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

நாகசாகி தாக்குதல்:

நாகசாகி தாக்குதல்:

அதே ஆண்டில் ஆகஸ்ட் 9 அன்று நாகசாகியின் மீதும் தனது அணுகுண்டு தாக்குதலை நடத்தியது. ஆகஸ்ட் 15 அன்று உலகப்போர் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு உலகில் எங்குமே அணு யுத்தம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதம் தழைக்கட்டும்:

மனிதம் தழைக்கட்டும்:

அணுகுண்டுகளையும், அழிவுக்கான ஆயுதங்களையும் பயன்படுத்தி, பயன்படுத்தித்தான் இன்று உணவை தரும் நிலங்களையும், மழையைத்தரும் மேகத்தையும் கூட மலடாக்கி வைத்திருக்கின்றோம். மனிதத்தையாவது தழைக்க வைத்தால்தான் மாற்றங்கள் நிகழும்.

English summary
Hiroshima, the JAPANESE CITY that suffered US atomic bombing in 1945 during the WORLD War II, commemorated the 69th anniversary of the bombing Wednesday at the city's Peace Memorial Park.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X