For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 லட்சம் விளக்குகளால் கிறிஸ்துமஸ் மர அலங்காரம்... ஆஸ்திரேலியக் குடும்பத்தின் கின்னஸ் சாதனை

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: கடந்த 2011ம் ஆண்டு அதிக மின்விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆஸ்திரேலிய குடும்பம், ஓராண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இந்தாண்டு கின்னஸில் இடம் பிடித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் வீடுகளில் நட்சத்திரங்கள் கட்டி, கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்கள் வைத்து கொண்டாடத் தொடங்கியுள்ளனர் மக்கள்.

அந்தவகையில் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை மீண்டும், மீண்டும் சாதனையாக மாற்றி வருகிறது ஆஸ்திரேலியக் குடும்பம் ஒன்று.

3 லட்சம் விளக்குகள்....

3 லட்சம் விளக்குகள்....

ஆஸ்திரேலியாவில் உள்ள கன்பெர்ரா நகரில் வாழ்ந்து வருபவர் டேவிட் ரிச்சர்ட்ஸ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது குடும்பத்தாரின் உதவியுடன் 3 லட்சத்து 31 ஆயிரத்து 38 கண்கவரும் வண்ண விளக்குகளை தனது வீட்டு தோட்டத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரங்களில் அமைத்து அலங்காரம் செய்தார்.

கின்னஸ் சாதனை....

கின்னஸ் சாதனை....

இதன் மூலம் அதிக விளக்குகளால் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்தார் என்ற சாதனையை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

3லட்சம் விளக்குகளால்....

3லட்சம் விளக்குகளால்....

ஆனால், கடந்தாண்டு, டேவிட்டின் சாதனையை முறியடிக்கும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த இன்னொருவர் 3 லட்சத்து 46 ஆயிரத்து 283 வண்ண விளக்குகள் மூலம் தனது கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கின்னஸில் இடம் பெற்றார்.

5 லட்சம் விளக்குகள்....

5 லட்சம் விளக்குகள்....

இந்நிலையில், இந்தாண்டு மீண்டும் தனது கிறிஸ்துமஸ் மரங்களை 5 லட்சத்து 2 ஆயிரத்து 165 வண்ண விளக்குகள் மூலம் அலங்கரித்துள்ளார் டேவிட்.

மீண்டும் சாதனை....

மீண்டும் சாதனை....

இதன் மூலம் கடந்தாண்டு தவற விட்ட தனது கின்னஸ் சாதனையை மீண்டும் தன் வசப் படுத்தியுள்ளார் டேவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An Australian family have broken the Christmas lights world record by putting over half a million bulbs up on their home. The Richards installed a staggering 502,165 lights around their home and garden to reclaim the world record they first achieved back in 2011.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X