For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னும் 10 வருடத்தில் நிலாவிலேயே குடியேறி நிஜமாகவே 'வடை' சுடலாம்.. நாசா நம்பிக்கை

Google Oneindia Tamil News

நியூயார்க்: நிலாவில் மனிதன் குடியேறுவது வெகு தொலைவில் இல்லை, இன்னும் 10 வருடங்களில் அது சாத்தியமாகலாம் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு நாசாவின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்பல்லோ 11 குழு சந்திரனின் மேற்பரப்பில் கால் பதித்ததன் 46வது ஆண்டு தினம் கடந்த 20ம் தேதி கொண்டாடப்பட்டது. அன்று இந்த ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

இந்த ஆய்வு நெக்ஸ்ஜென் ஸ்பேஸ் எல்.எல்.சி.யால் மேற்கொள்ளப்பட்டது. நிலாவில் மனிதன் அடுத்தகட்டமாக எப்போது காலடி எடுத்து வைப்பது என்பது குறித்த திட்டத்தையும் அது தெரிவித்துள்ளது.

நிலாவில் மனிதன்...

நிலாவில் மனிதன்...

2017ம் ஆண்டு மனிதன் மீண்டும் நிலாவில் ஆய்வு மேற்கொள்ள முடியும் என்று இந்த ஆய்வு நம்பிக்கை தெரிவித்துள்ளது. நாசா தனது திட்டத்தை சரியான முறையில் அணுகினால் இது சாத்தியமாகுமாம்.

2020ல் சாத்தியம்...

2020ல் சாத்தியம்...

2018ம் ஆண்டு நிலாவில் ஹைட்ரஜன் உள்ளதா என்ற ஆய்வை மனிதர்கள் செய்ய முடியும் என்றும் 2019 அல்லது 2020ல் மனிதர்கள் நிலாவில் இறங்கி நடமாட முடியும் என்றும் அது கூறுகிறது.

நிரந்தரமாக தங்கலாம்...

நிரந்தரமாக தங்கலாம்...

மேலும் 2012ல் நிரந்தரமாக அங்கு தங்குமிடத்தை அமைக்க முயலலாம் என்றும் மனிதர்கள் 2022ல் அங்கு குடியேற முடியும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

விண்கலங்கள் மூலம் உணவு...

விண்கலங்கள் மூலம் உணவு...

தற்போது மனிதர்களிடம் உள்ள விண்கலங்களைக் கொண்டே இதை சாதிக்க முடியும் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சர்வதேச விண்வெளி மையத்திற்கு உணவுப் பொருள் உள்ளிட்ட பொருட்களை எப்படி நாசா சப்ளை செய்கிறதோ அதேபோல நிலாவில் குடியேறுவோருக்கும் உணவுப் பொருள் உள்ளிட்டவற்றை அனுப்ப முடியுமாம்.

ஒப்பந்தம்...

ஒப்பந்தம்...

தற்போது நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனமும் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்குப் பொருட்களை அனுப்புகின்றன. ஒரு கிலோகிராம் பொருளுக்கு 4750 டாலரை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவடிடமிருந்து வசூலிக்கிறது.

ராக்கெட் மூலம்...

ராக்கெட் மூலம்...

தனது பால்கன் 9 ராக்கெட் மூலம் இவற்றை ஸ்பேஸ் எக்ஸ் அனுப்புகிறது. இந்த செலவானது அப்பல்லோ காலத்து சாட்டர்ன் 5 ராக்கெட்டுக்கு ஆகும் செலவை விட குறைவாகும். சாட்டர்ன் 5 ராக்கெட் மூலம் ஆகும் செலவானது தற்போது கிலோவுக்கு 46,000 டாலர் ஆக உள்ளது.

நாசாவின் திட்டம்...

நாசாவின் திட்டம்...

தனது அடுத்த தலைமுறை ராக்கெட் மூலம் மீண்டும் நிலவுக்குச் செல்ல நாசா ஏற்கனவே திட்டமிட்டு வருகிறது. இருப்பினும் நிலவில் தரையிறங்கும் திட்டம் எதுவும் நாசவிடம் இல்லை.

பார்க்கலாம் நிலாவுக்கு நேரில் போய் வடை சுடுகிறோமோ அல்லது கதை மட்டும் சொல்லிக் கொண்டிருப்போமா என்பதை.

English summary
According to a NASA-funded study, humans may be able to live on the moon in a little more than a decade from now. The study outlines a plan to again take human missions to the moon, media reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X