For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப்ளூட்டோவில் 11000 அடி உயர பனி மலைகள்... நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பிய புதிய படம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ப்ளூட்டோ கிரகத்தில் 11 ஆயிரம் அடி உயர பனிமலைகள் இருப்பது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பியுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

ப்ளூட்டோ கிரகமானது உறைநிலையில் உள்ள குட்டி கிரகமாகும். சூரியக் குடும்பத்திலிருந்து இது 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கிரகங்களில் ஒன்றாக இருந்த இதை பின்னர் விஞ்ஞானிகள் தகுதி நீக்கம் செய்து விட்டனர்.

இந்த கிரகத்தைக் குறித்து ஆராய, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கடந்த 2006ம் ஆண்டு நியூ ஹாரிஸான்ஸ் என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியது.

வரலாற்றுச் சாதனை...

வரலாற்றுச் சாதனை...

சுமார் ஒன்பதரை ஆண்டு காலம் பயணத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் ப்ளூட்டோவினைக் கடந்து சென்று வரலாற்றுச் சாதனை செய்துள்ளது இந்த விண்கலம். அப்போது இந்த விண்கலம் ப்ளூட்டோ மற்றும் அதன் நிலாக்களை ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தது.

புகைப்படங்கள்...

புகைப்படங்கள்...

அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அது அனுப்பி வருகிறது.

பனி மலைகள்...

பனி மலைகள்...

தற்போது நியூஹாரிஸான்ஸ் அனுப்பியுள்ள புகைப்படம் ஒன்றில் ப்ளூட்டோ கிரகத்தில் பனி மலைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ப்ளூட்டோவின் ஈக்வெட்டார் பகுதியில் இந்த பனிமலைகள் அமைந்துள்ளன.

11,000 அடி உயர பனிமலைகள்...

11,000 அடி உயர பனிமலைகள்...

இவை சுமார் 11 ஆயிரம் அடி உயரம் இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பனி மலைகள் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானவைகளாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

16 மாதங்கள் ஆகலாம்...

16 மாதங்கள் ஆகலாம்...

தொடர்ந்து ப்ளூட்டோவையும், அதன் நிலாக்களையும் குறித்து தான் எடுத்த புகைப்படங்களை நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பி வருகிறது. புளூட்டோவை அடைந்துள்ள வரையில் எடுத்துள்ள ஆயிரக்கணக்கான புகைப்படங்களை இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பி வைக்க 16 மாதங்கள் ஆகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்பு...

எதிர்பார்ப்பு...

நியூ ஹாரிஸான்ஸ் அனுப்பி வரும் இப்புதிய புகைப்படங்களால் ப்ளூட்டோ குறித்து மேலும் பல அரிய தகவல்கள் தெரிய வரும் என நாசா விஞ்ஞானிகள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.இந்தப் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் மூலம் ப்ளூட்டோவின் தரைப்பகுதி, தட்பவெப்பம் குறித்து அறிந்து கொள்ள இயலும் என அவர்கள் கூறுகின்றனர்.

முதல் மனித விண்கலம்...

முதல் மனித விண்கலம்...

ப்ளூட்டோவுக்கு விஜயம் செய்யும் முதல் மனித விண்கலம் என்ற பெருமைக்கு உரியது நியூ ஹாரிஸான். ஆனால், விண்வெளியில் உள்ள குப்பைகள் இந்த விண்கலத்தை அழித்து விடுவதற்கு 10 ஆயிரத்தில் ஒரு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்து கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
With fanfare, NASA released the first batch of mesmerizing close-up images of Pluto and its moons on Wednesday, a day after the New Horizons spacecraft shot past it in a sprint to gather data about the former ninth planet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X