கனடாவில் தீவிரம் அடையும் போராட்டம்.. சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள்.. இந்திய தூதரகம் உதவி
ஒட்டவா: கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து தொடர் போராட்டம் நடப்பதால் கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி உதவி கோரியுள்ளனர்.
2019 இறுதியில் சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக பிற நாடுகளுக்கும் பரவியது. கடந்த 2 ஆண்டுகளில் பலமுறை உருமாறி தாக்கும் கொரோனா வைரஸ் உலகத்தையே முடக்கி போட்டுவிட்டது. பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா 3ம் அலை பாதிப்பு முடிவுக்கு வந்துள்ளது. பெரும்பாலானா மாநிலங்களில் பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளன. இருப்பினும் ஒருசில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றனர். இதனால் கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

கனடாவில் கட்டுப்பாடுகள்
அந்த வகையில் வட அமெரிக்க நாடான கனடாவில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதிப்பு அதிகமுள்ள மாகாணங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இங்கு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

போராட்டங்கள்
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் படிக்கும் பிறநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கனடாவின் கியூபெக் மாகாணத்தில் ரைசிங் ஃபீனிக்ஸ் இன்டர்நேஷனல் இன்க் அமைப்பின் மூன்று கல்லுாரிகளில் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.

3 கல்லூரிகளில் இந்தியர்கள்
மான்ட்ரியலில் உள்ள எம் கல்லூரி, ஷெர்ப்ரூக்கில் உள்ள சிஇடி கல்லூரி மற்றும் லாங்குவில் உள்ள சிசிஎஸ்கியூ கல்லூரி ஆகியவற்றில் இந்திய மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். போராட்டம் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் பலரும், இந்திய துாதரகத்தை அணுகியுள்ளனர். இந்திய தூதரகம் சார்பில் கனடா நாட்டு அரசு, கியூபெக் மகாண அரசு, இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தூதரகம் பேச்சுவார்த்தை
குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் தூதரகம் சார்பில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், இந்திய மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை மூடப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று கல்லூரியில் அவர்களுக்கு அட்மிஷன் பெற்று கொடுக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கனடா தலைநகர் ஒட்டவாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications