For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாக்கா இருக்கு.. கொரோனா தாக்கி இறந்தவர்களில் பலரும்.. வென்டிலேட்டர் கிடைக்காமல் பலியானவர்களாம்

வென்டிலேட்டர்கள் இல்லாமல் பல பேர் உயிரிழந்துள்ளனர்

Google Oneindia Tamil News

வூஹான்: இந்த செய்தியைக் கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. கூடவே இந்தியாவின் நிலையை நினைத்தால் பெரும் அயர்ச்சியாகவும் இருக்கிறது. சீனாவில் கொரோனாவைரஸ் தாக்கி பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சரியான வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் இறந்தவர்கள் என்று ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

கொரோனாவைரஸ் தாக்கிப் பலியானவர்களில் ஐந்தில் ஒருவருக்கு மட்டுமே முறையான வென்டிலேட்டர் வசதி கிடைத்துள்ளதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இதுதொடர்பான ஆய்வறிக்கையை அமெரிக்க மருத்துவ கழகம் தனது இதழில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன. இந்த ஆய்வு அனைத்தும் வூஹானில் உள்ள 21 மருத்துவமனகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

நோயாளிகள்

நோயாளிகள்

அதாவது, மரணத்திற்கு முன்பு ஐந்தில் ஒரு நோயாளிக்குத்தான் அதி தீவிர வென்டிலேஷன் வசதி கிடைத்துள்ளது. மற்றவர்களுக்கு அது சரிவர கிடைக்கவில்லை அல்லது கொடுக்கப்படவில்லையாம். ஜனவரி 21 முதல் 30ம் தேதி வரை மொத்தம் 168 நோயாளிகள் கொரோனாவைரஸ் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

ஆக்சிஜன்

ஆக்சிஜன்

தென் கிழக்கு சீன பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ஷோங்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்ஜின் தெரப்பி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 46 பேருக்கு மட்டும்தான் மூக்கு வழியாக டியூப் போட்டு அல்லது முகத்தில் மாஸ்க் போட்டு ஆக்சிஜன் செலுத்தும் வசதி கிடைத்துள்ளது.

வென்டிலேட்டர்

வென்டிலேட்டர்

மூன்றில் ஒரு நோயாளிக்கு high-flow nasal oxygen therapy வசதி கிடைத்துள்ளது. 72 நோயாளிகளுக்கு noninvasive ventilation வசதி கிடைத்துள்ளது. 34 நோயாளிகளுக்கு மட்டுமே வாய்க்குள் டியூபைப் போட்டு கொடுக்கப்படும் வென்டிலேட்டர் வசதி கிடைத்துள்ளது. பல நோயாளிகள் முறையான வென்டிலேட்டர் வசதி கிடைக்காமல் பலியாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நோயாளிகள்

நோயாளிகள்

அதேசமயம், வேறு பல காரணங்களும் கூட மரணம் சம்பவிக்கக் காரணமாக இருக்கக் கூடும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். சில நோயாளிகளுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக invasive mechanical ventilators வசதி செய்து கொடுக்கப்படவில்லை. அது கிடைத்திருந்தால் அவர்கள் உயிர் பிழைத்திருக்கக் கூடும்.

குழப்பம்

குழப்பம்

அவசரம் அவசரமாக மருத்துவப் பணிகளுக்கு அழைக்கப்பட்ட பலருக்கு சரியான பயிற்சி கிடைக்காத காரணத்தால் எந்த நேரத்தில் என்ன மாதிரியான வென்டிலேட்டர் தரப்பட வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இறந்த பலரும் அதிக அளவிலான ரத்த அழுத்தம் காரணமாகவே உயிரிழந்துள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆய்வு முடிவு சரியே என்றும் நம்பப்படுகிறது.

நுரையீரல்

நுரையீரல்

கொரோனாவைரஸ் மனித உடலில் புகுந்த பின்னர் நுரையீரலைத்தான் குறி வைப்பதாக ஏற்கனவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே வென்டிலேட்டர்தான் இந்த சிகிச்சையில் மிக மிக முக்கியமாக தேவைப்படும் ஒன்றாகும். ஆனால் அது சரியாக கிடைக்காமல் போனதால் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சி தருவதாக உள்ளது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்தியாவில் 3வது கட்டத்துக்கு கொரோனாவைரஸ் பரவி விடக் கூடாது என்று எல்லோரும் பதற இந்த வென்டிலேட்டர்தான் முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. காரணம், நமது நாட்டில் மிகப் பெரிய அளவில் பரவல் ஏற்பட்டால் வென்டிலேட்டருக்கு மிகப் பெரிய பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவேதான் எல்லோரும் வீட்டிலேயே முடங்கியிருந்தால் மட்டுமே வூஹான், இத்தாலி, அமெரிக்கா போன்ற சூழலைத் தவிர்க்க முடியும்.

English summary
coronavirus: In China's Whuhan many Coronavirus patients died of delayed Ventilator support
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X