வார்த்தையை விட்ட வங்கதேசம்.. இந்தியாவிடம் மோத தயாராகிறதா? இடைக்கால அரசின் அட்வைசர் கூறியதை பாருங்க
டாக்கா: பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கிடையே அந்நாட்டின் இடைக்கால அரசு தலைமை அட்வைசர் முகமது யூனுஷ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. முகமது யூனுஷ் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதா கூறப்படும் நிலையில் தான் முகமது யூனுஷ் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த கருத்து என்பது வங்கதேசம் நம் நாட்டிடம் மோதலுக்கு தயாராகிறதா? என்ற பெரிய கேள்வியை எழுப்பி உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தால் கடந்த மாதம் 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அதன்பிறகு அவர் அந்த நாட்டின் ராணுவ ஹெலிகாப்டரில் நம் நாட்டில் தஞ்சமடைந்தார். ஷேக் ஹசீனா நம் நாட்டுன் நல்லுறவில் இருந்து வந்தார்.

இதனால் உயிர் பயத்தில் வந்த ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு தற்காலிகமாக அடைக்கலம் கொடுத்துள்ளது. தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் உள்ளார். முகமது யூனுஷ் அந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
முகமது யூனுஷூக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் உள்ளிட்டவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பிறகு முகமது யூனுஷ் திடீரென்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வங்கதேசத்தில் நிலவும் கொந்தளிப்பான சூழலில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும், கோவில்கள், இந்துக்களின் வீடுகள் சூறையாடப்படுவதையும் தடுப்போம். இந்துக்கள் மட்டுமின்றி அங்கு வாழும் அனைத்து சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாப்போம் என்று முகமது யூனுஷ் உறுதியளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் தான் தற்போது வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான செயல்பாட்டில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களை சிறையில் இருந்து விடுவிப்பது, தடை விதிக்கப்பட்ட அமைப்புகளின் தடையை நீக்குவது உள்ளிட்ட வேலைகளை முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் தறே்பாது வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை அட்வைசர் முகமது யூனுஷ் இந்தியா தனது மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும் என்று பரபரப்பாக கூறியுள்ளார். இதனால் நம் நாட்டுடன் மோதிப்பார்க்க வங்கதேசம் நினைக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முகமது யூனுஷ் கூறியதாவது: ‛‛வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீதான தாக்குதல் என்பது வகுப்புவாதம் சம்பந்தப்பட்டது அல்ல. மாறாக அது அரசியல் மாற்றம் சார்ந்ததாக உள்ளது. இந்த தாக்குதலை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் இது மதத்தின் அடிப்படையிலான வகுப்புவாத தாக்குதல் அல்ல.
உண்மையில் இங்கு சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இந்த தாக்குதல்களை மிகப்பெரிய அளவில் வங்கதேசத்துக்கு எதிரான பிரசாரமாக கையில் எடுக்கிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதலை தடுக்க முடியாது என நாங்கள் கூறவில்லை. தாக்குதலை தடுப்பதற்கான அனைத்து விஷயங்களையும் மேற்கொள்கிறோம் என்று தான் கூறுகிறோம்.
இந்தியா என்பது தனது நிலையில் இருந்து மாற வேண்டும். வங்கதேசத்தில் இருப்பவர்கள் எல்லோரும் இஸ்லாமியர்கள். பிஎன்பி கட்சி என்பது இஸ்லாமியர்களுக்கானது. அனைத்து இஸ்லாமியர்களும் சேர்ந்து வங்கதேசத்தை ஆப்கானிஸ்தான் போல் மாற்றுவார்கள் என்று கூறுவதை இந்தியா நிறுத்த வேண்டும். அதேபோல் வங்கதேசம் ேஷக் ஹசீனாவிடம் இருப்பது தான் பாதுகாப்பானது என கூறுவதை நிறுத்த வேண்டும்.
இந்த மனநிலையில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும். வங்கதேசம் என்பதும் மற்ற நாடுகளை போல் தான். இது அண்டை நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வங்கதேசம் மற்றொரு ஆப்கானிஸ்தான் நாடாக மாறும் என்று இந்தியா கூறுகிறது. இந்த கருத்தை கைவிட்டுவிட்டு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான செயலில் ஈடுபட வேண்டும்'' '' என காட்டமாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications