For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி.. நேரில் வந்து பார்த்த புடின்! சீனா, பாகிஸ்தானுக்கு சான்ஸ் இல்லை

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ஜபாட் 2021 (Zapad-2021) ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவத்தின் நாகா படைப்பிரிவை சேர்ந்த 200 வீரர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர்.

Recommended Video

    இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி.. நேரில் வந்து பார்த்த புடின்! சீனா, பாகிஸ்தானுக்கு சான்ஸ் இல்லை

    ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒன்றிணைந்து "Zapad-2021" என்கிற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாட்டு எல்லைகள் மற்றும் பால்டிக் கடலில் ஒரு வார காலம் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

    80 போர் விமானங்கள், 300 டாங்கிகள், 15 போர்க்‍ கப்பல்கள் மற்றும் ஏராளமான ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுப்படுத்தப்பட்டன. பிரமாண்ட முறையில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

    தோஹாவில் இந்திய தூதருடன் பேச்சு நடத்திய 'தாலிபான்' தலைவர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்! தோஹாவில் இந்திய தூதருடன் பேச்சு நடத்திய 'தாலிபான்' தலைவர் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்!

    பல்வேறு பயிற்சிகள்

    பல்வேறு பயிற்சிகள்

    பயிற்சியின் முக்கிய கட்டத்தின் போது, ரஷ்ய ராணுவப் பிரிவுகள், ஆர்மீனியா, பெலாரஸ், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா ஆகிய ராணுவப் படைகளின் ராணுவக் குழுக்களுடன் இணைந்து கூட்டு நடைமுறை நடவடிக்கைகளில் பங்கேற்றன. இலக்கு வைத்து தாக்குதல் தொடுப்பது, எதிரிகளை அழிப்பது போன்ற ஒத்திகைகள் இதில் செய்யப்பட்டன.

    பாகிஸ்தான், சீனா பார்வையாளர்கள்

    பாகிஸ்தான், சீனா பார்வையாளர்கள்

    போர் ஒத்திகையில் இந்தியா தனது ராணுவ திறமையை வெளிப்படுத்தியபோது, வியட்நாம், மலேசியா, வங்காளதேசம், மியான்மர், உஸ்பெகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் 'பார்வையாளர்' நாடுகள் என்ற பட்டியலில் பாகிஸ்தானும், சீனாவும் இருந்தன. ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் குடியரசின் ஆயுதப்படைகளின் கூட்டு பயிற்சி இரண்டு நாட்டு தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஏற்ப இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    ரஷ்யா அறிவிப்பு

    ரஷ்யா அறிவிப்பு

    ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்திய ஆயுத மோதல் அனுபவத்தை அடிப்படையாக கொண்டு, போர் பயிற்சி நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். அந்த மோதல்களில் தங்களை நிரூபித்த வீரர்கள் மற்றும் படைகளின் புதிய செயல்பாட்டு முறைகளை அடிப்படையாக கொண்டது இந்த பயிற்சி.

     பல வகை ஆயுதங்கள்

    பல வகை ஆயுதங்கள்

    முதல் முறையாக, உளவு மற்றும் நெருப்பில் செயல்படும் ரோபோக்கள், மல்டிஃபங்க்ஸ்னல் ரோபோடிக் வளாகங்கள், பிஎம்பி பி -19 காலாட்படை போர் வாகனங்களின் மாதிரிகள் உள்ளிட்டவை இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிபர் புடின் பார்வையிட்டார்

    அதிபர் புடின் பார்வையிட்டார்

    இந்த போர் பயிற்சியின்போது விண்ணில் ஆயுதங்கள் சீறிப் பாய்ந்தது பார்ப்போரை நடுங்க வைப்பதாக இருந்தது. போர் பயிற்சி நடந்த பகுதிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சென்று, அவற்றை நேரில் பார்வையிட்டு, ராணுவ வீரர்களுக்கு உற்சாகம் அளித்தார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெற்ற நிலையில், ரஷ்யாவும், இந்தியாவும் போர் பயிற்சியில் பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    English summary
    The Indian Army contingent of personnel from the Naga Regiment and Mechanised Infantry and commandos of the Indian Air Force on Monday participated at the multi-nation strategic drills, Zapad 2021, at Nizhniy in Russia.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X